பயோனியர்  ஆசியா குழுமத்திற்கு மின்சார பைக்குகளை வழங்கிய ஹீரோ எலக்ட்ரிக்பயோனியர் ஆசியா குழுமத்திற்கு மின்சார பைக்குகளை வழங்கிய ஹீரோ எலக்ட்ரிக் ...  அன்று, கையில் ஒரு டாலர் இன்று ‘நம்பர் ஒன்’ பணக்காரர் அன்று, கையில் ஒரு டாலர் இன்று ‘நம்பர் ஒன்’ பணக்காரர் ...
சில்லரை விலை பணவீக்கம் டிசம்பரில், இலக்குக்குள் வரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜன
2021
21:48

பெங்களூரு:நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், டிசம்பர் மாதத்தில் குறைந்து, ரிசர்வ் வங்கியின் இலக்குக்குள் இருக்கும் என, ‘ராய்ட்டர்ஸ்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கை கணித்துள்ளது.

இது குறித்து மேலும் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நாட்டின் உள்ள, 45 பொருளாதார நிபுணர்களிடம் மேற்கொண்ட ஆய்வில், டிசம்பர் மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம், 5.28 சதவீதமாக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் இது, 6.93 சதவீதமாக இருந்தது.சில்லரை விலை பணவீக்கத்தை பொறுத்தவரை, ரிசர்வ் வங்கியில் இலக்கு, 4 சதவீதமாகும். இதில் கூடுதலாகவோ; குறைவாகவோ, 2 சதவீதம் இருக்கலாம்.


அதாவது, 2 சதவீதத்திலிருந்து, 6 சதவீதம் வரை இருக்கலாம். டிசம்பர் மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம் குறைவதற்கு, காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களின் விலை குறைந்தது முக்கிய காரணமாக அமையும்.கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து, எட்டு மாதங்களாக, சில்லரை விலை பணவீக்கம், ரிசர்வ் வங்கியின் இலக்கை தாண்டியே இருந்தது. இந்நிலையில், டிசம்பர் மாதத்தில், இலக்குக்குள் வரும் என எதிர்பார்க்கலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)