பன்னாட்டு நிதியத்தின் பட்ஜெட் எதிர்பார்ப்புபன்னாட்டு நிதியத்தின் பட்ஜெட் எதிர்பார்ப்பு ... அதிபர் மாறியும் ‘ஆப்பிள்’ மாறவில்லை அதிபர் மாறியும் ‘ஆப்பிள்’ மாறவில்லை ...
சொத்துக்களை பறிமுதல் செய்வோம் இந்தியாவுக்கு, ‘கெய்ர்ன் எனர்ஜி’ எச்சரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜன
2021
00:25

புது­டில்லி:நடு­வர் தீர்ப்­பா­யத்­தின் தீர்ப்­பின்படி, இந்­திய அரசு, 10 ஆயி­ரத்து,220 கோடி ரூபாயை தர தாம­திப்­ப­தால், வெளி­நா­டு­களில் இருக்­கும் இந்­தி­யா­வின் சொத்­துக்­களை, ஜப்தி செய்­வது குறித்த நட­வ­டிக்­கை­களில் இறங்க இருப்­ப­தாக, ‘கெய்ர்ன் எனர்ஜி’ நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

வரி செலுத்­து­வது சம்­பந்­த­மாக, கடந்த, ஆறு ஆண்­டு­க­ளாக நடை­பெற்று வந்த வழக்­கில், பிரிட்­ட­னைச் சேர்ந்த, ‘கெய்ர்ன் எனர்ஜி’ நிறு­வ­னம், நடு­வர் தீர்ப்­பா­யத்­தின் மூலம், சாத­க­மான தீர்ப்பை அண்­மை­யில் பெற்­றது. இத­னை­ய­டுத்து, இந்­திய அரசு, ‘கெய்ர்ன் எனர்ஜி’ நிறு­வ­னத்­துக்கு, 8,760 கோடி ரூபா­யை­யும், அதற்­கான வட்­டித் தொகை மற்­றும் வழக்கு செலவு ஆகி­ய­வற்­றை­யும் சேர்த்து வழங்க வேண்­டும் என, நடு­வர் தீர்ப்­பா­யம் உத்­த­ர­விட்­டது.

இதன்­படி, இந்­திய அரசு, 10 ஆயி­ரத்து, 220 கோடி ரூபாய் கொடுக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டுஉள்­ளது. இந்­தியா, நடு­வர் தீர்ப்­பா­யத்­தின் தீர்ப்பை விரை­வில் நிறை­வேற்­றும் என்ற எதிர் பார்ப்­பில் பங்­கு­தா­ரர்­கள் இருப்­ப­தா­க­வும், அத­னால், உட­ன­டி­யாக நட­வ­டிக்­கையை மேற்­கொள்­ளு­மா­றும் கூறி, லண்­ட­னில் உள்ள, இந்­திய தூத­ர­கத்­துக்கு, ‘கெய்ர்ன் எனர்ஜி’ கடி­தம் எழுதி உள்­ளது.

மேலும் தாம­த­மா­கும்­பட்­சத்­தில், சொத்­துக்­களை பறி­மு­தல் செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­யில் இறங்க உள்­ள­தா­க­வும், அக்­க­டி­தத்­தில் குறிப்­பிட்­டுள்­ளது. அத்­து­டன் கடி­தத்­தின் நகலை, இந்­திய பிர­த­மர் அலு­வ­ல­கத்­துக்­கும், நிதி­ய­மைச்­ச­கம் மற்­றும் வெளி­வி­வ­கா­ரத் துறை அமைச்­ச­கம் ஆகி­ய­வற்­றுக்­கும் அனுப்பி உள்­ளது.

‘கெய்ர்ன் எனர்ஜி’க்கு சாத­க­மாக தீர்ப்பு வழங்­கப்­பட்ட நிலை­யில், தீர்ப்பை முழு­மை­யாக படித்­து­விட்டு, அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கையை மேற்­கொள்ள இருப்­ப­தாக, அப்­போது, இந்­தியா தெரி­வித்­தி­ருந்­தது.இந்­நி­லை­யில், நியு­யார்க் மாநாட்டு ஒப்­பந்­தத்­தில், இந்­தியா கையெ­ழுத்­திட்­டி­ருப்­ப­தால், பணத்தை திருப்பி செலுத்­தா­த­பட்­சத்­தில், வெளி­நா­டு­களில் இருக்­கும் இந்­தி­யா­வின் சொத்­துக்­களை பறி­மு­தல் செய்ய முடி­யும் என்­கி­றார்­கள், சட்ட நிபு­ணர்­கள்.

மேலும், மேல்­மு­றை­யீட்­டுக்கு சென்­றா­லும், இந்­தி­யா­வுக்கு சாத­க­மான வாய்ப்பு மிக­வும் குறைவு தான் என்­றும் சொல்­கி­றார்­கள்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)