அரசின் ஆதரவை கோரும் வாகன தயாரிப்பாளர்கள் அரசின் ஆதரவை கோரும் வாகன தயாரிப்பாளர்கள் ...  சென்னையில் சார்ஜிங் ஸ்டேஷன் சென்னையில் சார்ஜிங் ஸ்டேஷன் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
அடிமேல் அடி வாங்கும் ‘அம்பாஸடர்’ கார் நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2021
20:31

புதுடில்லி:பிரபல, ‘அம்பாஸடர்’ கார் தயாரிக்கும், ‘ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்’ நிறுவனம், மேற்கு வங்கம் மற்றும் மத்திய பிரதேசத்தில் இருக்கும் அதன் ஆலைகளிலிருந்து வெளியேற திட்டமிட்டுள்ளது.உ

த்தரபரா, பீதாம்பூர் ஆகிய இடங்களில் இருக்கும் இந்த இரு தொழிற்சாலைகளை விற்பதற்கோ, அல்லது குத்தகைக்கு விடுவதற்கோ பங்குதாரர்களின் அனுமதியை பெற, நிர்வாக குழு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோல்கட்டாவுக்கு சற்று வெளியே உள்ள, உத்தரபராவில், ஆலை 795 ஏக்கரில் அமைந்து உள்ளது. பிதாம்பூர் ஆலை, 30 ஏக்கர் கொண்டது. இந்த இரண்டு ஆலைகளிலும் உற்பத்தி எதுவும் தற்போது நடக்கவில்லை.உத்தரபராவில் உள்ள, 795 ஏக்கரில், 314 ஏக்கர் ஏற்கனவே, ‘ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ்’ நிறுவனத்துக்கு, 2007ல் விற்கப்பட்டுவிட்டது.

அடுத்து ஒரு, 100 ஏக்கர், ‘ஹிரானந்தனி’ குழுமத்துக்கு அண்மையில் விற்கப்பட்டது. ‘ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்’ தயாரிப்புகளுக்கு, சந்தையில் பெரிய வரவேற்பு இல்லாத நிலையில், நிறுவனம் தன்னுடைய நிகர மதிப்பு கரைந்து வருவதை தடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.இதன் தொடர்ச்சியாகவே, அசையா சொத்துக்களை விற்பனை செய்து வருகிறது. குஜராத் மற்றும் சென்னையில் இருந்த இடங்கள் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுவிட்டன.

கடந்த, 2014ம் ஆண்டிலிருந்து அம்பாஸடர் கார் தயாரிப்பை கைவிட்டு விட்டது, இந் நிறுவனம்.மேலும் பிராண்டு பெயரையும், 80 கோடி ரூபாய்க்கு, கடந்த, 2017ல், பிரெஞ்சு வாகன தயாரிப்பு நிறுவனமான, பியூஜியோ எஸ்.ஏ., நிறுவனத்துக்கு விற்று விட்டது.இவை ஒரு புறமிருக்க, கூட்டு தொழில் துவங்குவதற்கான முயற்சிகளையும் நிறுவனம் தொடர்ந்து எடுத்து வருகிறது.ஆனாலும், அடி மேல் அடியாக, கொரோனாவால் அந்த முயற்சிகளும் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளன.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)