வீடுகள் விற்பனை சென்னையில் அதிகரிப்பு வீடுகள் விற்பனை சென்னையில் அதிகரிப்பு ...  கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை அதிகம் விரும்பும் மக்கள் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை அதிகம் விரும்பும் மக்கள் ...
வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
சொந்த வீடு வாங்­கு­ப­வர்­கள் கவ­னிக்க வேண்­டிய போக்­கு­கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2021
19:21

கடந்த நிதி­யாண்டு மற்ற துறை­கள் போலவே ரியல் எஸ்­டேட் துறைக்­கும்
சவா­லா­ன­தா­கவே இருந்­தது. கொரோனா பாதிப்பு உள்­ளிட்ட பல்­வேறு கார­ணங்­க­ளி­னால் முதல் பாதி­யில் விற்­ப­னை­யில் சரிவு ஏற்­பட்ட நிலை­யில், இரண்­டாம் பாதி­யில் மீட்சி உண்­டா­னது. கடந்த ஆறு மாதங்­க­ளாக வீடு­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக சொல்­லப்­படும் நிலை­யில், இந்த நிதி­யாண்­டில் நிலைமை மேலும் மேம்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இந்த பின்­ன­ணி­யில் சொந்த வீடு வாங்க உள்­ள­வர்­கள் மன­தில் கொள்ள வேண்­டிய முக்­கிய அம்­சங்­கள் வரு­மாறு:

தேவை அதி­க­ரிப்பு:


கொரோனா பெருந்­தொற்று சூழ­லில்,சொந்த வீட்­டிற்­கான தேவை அதி­க­ரித்­துள்­ளது.
மேலும் சொந்த வீடு வாங்­கு­ப­வர்­கள், வீட்­டின் அளவு பெரி­தாக இருக்க வேண்­டும் என்­றும் விரும்­பு­கின்­ற­னர். வீட்­டில் இருந்து பணி­யாற்­றும் சூழல் இதற்­கான கார­ண­மாக அமை­கிறது.

உட­னடி வீடு­கள்:


அதி­க­ரிக்­கும் தேவை கார­ண­மாக, வாங்­கி­ய­வு­டன் குடி­யேற தயா­ராக உள்ள வீடு­க­ளுக்கு கிராக்கி உண்­டா­கும்என கரு­தப்­ப­டு­கிறது. பல­ரும் கட்டி முடிக்­கப்­பட்ட வீடு­க­ளையே நாடு­கின்­ற­னர். இரண்­டாம் அலை அச்­சம் கார­ண­மாககட்­டு­மான பணி­கள் தாம­த­மா­னால், இந்த பிரி­வில் மேலும்கிராக்கி அதி­க­ரிக்­கும்.


விலை போக்கு:


ரியல் எஸ்­டேட் துறை­யில் நில­விய தேக்­கம்கார­ண­மாக விலை­யும் அதி­கம் உய­ரா­மல்
இருந்­தது. தற்­போது பெரிய வீடு­க­ளுக்­கான தேவை மற்­றும் புதிய திட்­டங்­கள்குறைந்­து
இருப்­ப­தன் கார­ண­மாக, ஒரு சில பிரி­வு­களில் வீடு­க­ளின் விலை உய­ர­லாம் என
எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. கட்டி முடிக்­கப்­பட்ட வீடு­கள் பிரி­வில் இதன் தாக்­கம் அதி­கம் இருக்­கும்.

வட்டி விகி­தம்:


வீட்­டுக்­க­ட­னுக்­கான வட்டி விகி­தத்தை பொருத்­த­வரை இது­வரை மிக­வும் சாத­க­மான போக்கு நில­வு­கிறது.இது வரை இல்­லாத அளவு வட்டி விகி­தம் குறை­வாகஅமைந்­துள்­ளது. ஆனால், வட்டி விகி­தம் மேலும் குறையவாய்ப்­பில்லை என கரு­தப்­ப­டு­வ­தோடு, ஒரு கட்­டத்­தில் வட்டி விகி­தம் உய­ரும் வாய்ப்­பும் இருக்­கிறது.


முத­லீடு அல்ல:


ரியல் எஸ்­டேட் துறை போக்­கு­களைநோக்­கும் போது, சொந்த வீடு வாங்க காத்­துஇ­ருப்­ப­வர்­க­ளுக்குஇது ஏற்ற நேரம் என கரு­த­லாம். ஆனால், இது சொந்தபயன்­பாட்­டிற்கு மட்­டுமே பொருந்­தும். முத­லீடு நோக்­கில் வீடு வாங்­கு­வ­தாக இருந்­தால் மற்ற
அம்­சங்­க­ளை­யும் பரி­சீ­லித்துமுடிவு எடுக்க வேண்­டும்.

Advertisement

மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், நாட்டில், விற்பனை ஆகாத வீடுகளின் எண்ணிக்கை 1 சதவீதம் ... மேலும்
business news
புதுடில்லி,-–வீடுகளின் விலை, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 11 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என, ... மேலும்
business news
புதுடில்லி:ரியல் எஸ்டேட் துறையில், ‘டாப் 1’ கோடீஸ்வரர் என்ற சிறப்பை, டி.எல்.எப்., நிறுவன தலைவர் ராஜீவ் சிங் ... மேலும்
business news
புதுடில்லி:நடப்பாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், 8 முக்கிய நகரங்களில், வீடுகள் விற்பனை 7 சதவீதம் ... மேலும்
business news
புதுடில்லி:வீடுகள் விலை அதிகரிப்பதில், உலகளவில், இந்தியா 51வது இடத்தில் இருப்பதாக, சொத்து ஆலோசனை நிறுவனமான ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)