‘எலக்ட்ரானிக், மொபைல் போன்’ உற்பத்தி மீண்டும் அதிகரிப்பு ‘எலக்ட்ரானிக், மொபைல் போன்’ உற்பத்தி மீண்டும் அதிகரிப்பு ...  தொலைதொடர்பு துறையில் பி.எல்.ஐ., திட்டத்துக்கு வரவேற்பு தொலைதொடர்பு துறையில் பி.எல்.ஐ., திட்டத்துக்கு வரவேற்பு ...
‘விட்கோ’ நிறுவனம் மூடப்பட்டது வணிகத்தை சாய்த்த கொரோனா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2021
19:13

சென்னை:கடந்த, 70 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த பிரபலமான, ‘விட்கோ’ நிறுவனம் மூடப்பட்டுவிட்டது.

இந்நிறுவனம், பயணங்களுக்கு தேவையான சூட்கேஸ் உள்ளிட்ட, ‘லக்கேஜ் கேரியர்’ பொருட்களை விற்பனை செய்து வந்தது. பல இடங்களில் கிளைகளை கொண்டு இயங்கி வந்த இந்த நிறுவனம், ஸ்கூல் பேக்குகள், சூட்கேஸ்கள், லக்கேஜ் டிராலிகள் ஆகியவற்றை பெருமளவில் விற்பனை செய்து வந்தது.

இந்நிலையில், தன் வணிகத்தை மூடிவிடுவதாக, அதன் இணையதளத்தில் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில், ‘நாங்கள் எங்கள் வணிகத்தை மூடுகிறோம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். ‘வணிகத்தை மூடும் முடிவை எடுப்பது எளிதான ஒன்றல்ல.

ஆனால், துரதிருஷ்டவசமாக கொரோனா பாதிப்புகள் மற்றும் சர்வதேச பயணங்களுக்கான தடை ஆகியவை காரணமாக, நிலைக்க முடியவில்லை. ‘கடந்த, 70 ஆண்டுகளாக ஆதரவளித்த வாடிக்கையாளர்களுக்கு நன்றி’ என, தெரிவித்துள்ளது. இந் நிறுவனம், 1951ம் ஆண்டு வெறும், 500 சதுர அடியில், வட சென்னையிலுள்ள, ஜார்ஜ் டவுனில் துவங்கப்பட்டது. அதன் பிறகு தொடர் வளர்ச்சியை கண்டு, பிரபல பிராண்டாக மாறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)