பதிவு செய்த நாள்
18 ஜூன்2021
22:35
சென்னை:‘கனெக்டட் டெக்னாலஜி’ உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய, புதிய ‘டி.வி.எஸ்., ஐக்யூப்’ எலக்ட்ரிக் வாகனத்தை, டி.வி.எஸ்., நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து டி.வி.எஸ்., நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:டி.வி.எஸ்., நிறுவனம், டி.வி.எஸ்., ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சென்னையில் அறிமுகம் செய்தது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த, பசுமை இருசக்கர வாகனமாக தயாரிக்கப்பட்டுள்ளது. கனெக்டட் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.நகர்ப்புற பயணங்களுக்கு உற்சாகம் அளிப்பதுடன், மேம்பட்ட எலக்ட்ரிக் டிரைவ்ட்ரெய்ன் மற்றும் அடுத்த தலைமுறை நுட்பத்திலான டி.வி.எஸ்., ஸ்மார்ட் கனெட்க் தளத்துடன் திறன்மிக்க ஸ்கூட்டராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் எக்ஸ் ஹோம் சார்ஜிங் யூனிட் மற்றும் டி.வி.எஸ்.,ஐக்யூப் மொபைல் போன் செயலி வாயிலாக,பொது சார்ஜிங்கை இணைக்கும் வசதி இதில் உள்ளது.மணிக்கு அதிகபட்சமாக, 78 கி.மீ., வரை பயணிக்கலாம்.முதல், 4.2 வினாடிகளில், 40 கி.மீ., வேகம் வரை செல்லும். பேட்டரி சார்ஜ் பற்றிய நிலையை தெரிவித்தல் உட்பட பல்வேறு வசதிகள் இதில் உள்ளன.
இந்த ஸ்கூட்டரின் ஆன் – ரோடு விலை, 1.15 லட்சம் ரூபாய்.‘ஆன்லைன்’ வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|