பதிவு செய்த நாள்
22 ஜூலை2021
20:53
புதுடில்லி:பிரிட்டிஷ் எலக்ட்ரிக் பைக் நிறுவனமான, ‘கோ ஜீரோ மொபிலிட்டி’ இந்தியாவில், ‘ஸ்கெலிக் லைட் இ – பைக்’ எனும் வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை, 19 ஆயிரத்து 999 ரூபாய்.
நகர போக்குவரத்துக்கு மிகவும் ஏற்ற, இந்த மின்சார சைக்கிள், ஒரு முறை ‘சார்ஜ்’ ஏற்றினால், 25 கிலோமீட்டர் துாரம் வரை செல்லலாம் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக, மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம். இதில், கழற்றிக்கொள்ளும் வகையிலான, 210 வாட் ஹவர் லித்தியம் பேட்டரியும், 250 வாட் ரியர் ஹப் டிரைவ் மோட்டாரும் உள்ளன.கூடவே, எல்.இ.டி., டிஸ்பிளே வசதியும் உள்ளது.
ஒரு முறை இந்த பேட்டரியை சார்ஜ் ஏற்ற, இரண்டரை மணி நேரம் பிடிக்கும்.ஸ்கெலிக் லைட் தவிர, மேலும் இரண்டு மாடல்களும் உள்ளன. ஸ்கெலிக் லைட் வாகனத்தை 2,999 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அங்கிட் குமார் தெரிவித்து உள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|