‘மாஸ்டர்கார்டு’க்கு தடை ‘விசா’வுக்கு தாவிய ஆர்.பி.எல்., ‘மாஸ்டர்கார்டு’க்கு தடை ‘விசா’வுக்கு தாவிய ஆர்.பி.எல்., ...  ‘ஸ்மார்ட் வங்கிகளை கட்டுப்படுத்தசட்டம் இல்லை சுபாஷ் சந்திர கார்க் ‘ஸ்மார்ட் வங்கிகளை கட்டுப்படுத்தசட்டம் இல்லை சுபாஷ் சந்திர கார்க் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வீட்டுக் கடனில் சலுகைகள் எஸ்.பி.ஐ., அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2021
20:24

மும்பை:பண்டிகை காலத்தை முன்னிட்டு, பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., வீட்டுக்கடன் பிரிவில், அதன் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளது.

டிசம்பர் 31ம் தேதி வரை செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், ‘சிபில் ஸ்கோர்’ உடன் இணைக்கப்பட்ட வீட்டுக் கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு, குறைந்தபட்ச வட்டி விகிதம் 6.70 சதவீதம். மேலும், இக்காலகட்டத்தில் பெறப்படும் வீட்டுக் கடன்களுக்கு, பரிசீலனை கட்டணம் எதுவும் வசூலிக்கப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த வட்டிவிகிதம் எவ்வளவு கடன் வாங்கினாலும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன், 75 லட்சம் ரூபாய்க்கு மேல் வழங்கப்படும் வீட்டுக்கடனுக்கு, வட்டி 7.15 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.வட்டி குறைக்கப்பட்டதை அடுத்து, ஒரு வாடிக்கையாளர், 30 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையில் 75 லட்சம் ரூபாய் கடன் பெற்றால், அவரால் 8 லட்சம் ரூபாய் வரை திருப்பிச் செலுத்துவதில் சேமிக்க முடியும்.

மேலும், மாத சம்பளம் வாங்காதவர்களுக்கு, 15 அடிப்படை புள்ளிகள் வட்டி அதிகமாக இருந்தது. இது மாற்றப்பட்டு, மாத சம்பளம் பெறுபவர், பெறாதவர் என இரு தரப்புக்குமான வித்தியாசம் நீக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)