உலக வங்கி பட்டியலில் முறைகேடு இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லை உலக வங்கி பட்டியலில் முறைகேடு இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லை ...  வரி தாக்கலில் தாமதம் வேண்டாம் வரி தாக்கலில் தாமதம் வேண்டாம் ...
சைபர் காப்பீட்டிற்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2021
18:54

சைபர் குற்றங்களுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கும் காப்பீடு பாலிசிகளின் பாதுகாப்பை விரிவாக்கும் வகையில் புதிய நெறிமுறைகள் அமைந்துள்ளன.இணைய பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வரும் சூழலில், இணைய மோசடி உள்ளிட்ட சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.


இந்நிலையில், இணைய இடர்களில் இருந்து தனிநபர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சைபர் காப்பீடு பாலிசிகளை உருவாக்குவது தொடர்பான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை, இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது. சைபர் காப்பீடு பாலிசிகளின் பாதுகாப்பு அம்சங்களை விரிவாக்கும் வகையிலும், ஏற்கனவே உள்ள குறைகளை போக்கும் வகையிலும் இந்த நெறிமுறைகள் அமைந்துள்ளன.

சைபர் காப்பீட்டிற்கான பாலிசி உருவாக்கத்திற்கான வழிகாட்டுதல்கள் எனும் தலைப்பில் காப்பீடு ஆணையம் வெளியிட்டுள்ள புதிய நெறிமுறைகளின் கீழ், வங்கி, கிரெடிட் கார்டு மூலமான நிதி திருட்டு, அடையாளத் திருட்டு ஆகிய அம்சங்களுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்க வழி செய்யப்பட்டுள்ளது.சமூக ஊடக கணக்கு பாதுகாப்பு, மால்வேர் பாதுகாப்பு ஆகிய அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ஆன்லைன் குற்றங்கள் தொடர்பாக விரிவான பாதுகாப்பு அளிக்கும் வகையில் ‘இ – மெயில்’ மோசடி, அனுமதி இல்லாத ஆன்லைன் பரிவர்த்தனை உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பான அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

பெருகி வரும் சைபர் தாக்குதல்களுக்கு எதிராக மேம்பட்ட பாதுகாப்பை அளிக்கும் அம்சங்களை பாலிசி கொண்டிருப்பதோடு, பாலிசி விபரங்கள் புரிந்து கொள்ள எளிதாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இழப்பீட்டிற்கான கோரிக்கை முறைகளும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அமைந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இல்ல காப்பீடு போன்ற பாலிசியின் அங்கமாக சைபர் பாதுகாப்பு பாலிசியை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறைந்த பிரிமியத்தில் அடிப்படை அம்சங்கள் கொண்ட பாலிசியை வழங்கி, கூடுதல் அம்சங்களை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போதுள்ள சைபர் பாதுகாப்பு பாலிசிகளில் உள்ள குறைகளை களையும் வகையிலும் வழிகாட்டி நெறிமுறைகள் அமைந்துள்ளன. சைபர் குற்றம் தொடர்பாக இழப்பீடு கோரிக்கை சமர்ப்பிக்க, காவல் துறையின் முதல் தகவல் அறிக்கை தேவை என வலியுறுத்தப்படுகிறது.

எனினும், முதல் தகவல் அறிக்கை பெறுவதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு, 5,000 ரூபாய்க்கு குறைவான கோரிக்கை எனில், தேசிய சைபர் குற்ற தகவல் இணையதளத்தில் முறையீடு செய்து, அதன் புகார் நகலை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சைபர் பாலிசி விதிமுறைகளின் படி, தனிநபர்கள் இணைய பாதுகாப்பிற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


பயனாளிகள் கவனக்குறைவால் பாதிப்பு ஏற்படாத நிலையில் மட்டுமே கோரிக்கைகள் ஏற்கப்படுகின்றன. இதற்கான வரையறையை தெளிவாக குறிப்பிட வேண்டும் என ஆணையம் வலியுறுத்தியுள்ளது.வங்கி தரப்பிலான தவறால் ஏற்படும் இழப்பு மற்றும் மூன்றாம் தரப்பு தாக்குதலால் ஏற்படும் இழப்பு ஆகியவற்றுக்கு பாலிசிதாரர் பொறுப்பல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனாளிகளுக்கு வரும் கோரப்படாத அழைப்புகளால் ஏற்படும் இழப்புகளையும் பாலிசி பாதுகாப்பில் கொண்டு வர வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


தனிநபர்களுக்கான சைபர் காப்பீடு பாலிசி தொடர்பான தேவையும், விழிப்புணர்வும் அதிகரித்து வரும் நிலையில், இந்த பாலிசிகளை மேலும் எளிமையாக்கி, அவற்றின் பாதுகாப்பை விரிவாக்க வழி செய்யும் வகையில் ஆணையத்தின் பரிந்துரைகள் அமையும் என கருதப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)