தொட்டுவிடும் துாரத்தில் ‘சென்செக்ஸ்’ 60 ஆயிரம் தொட்டுவிடும் துாரத்தில் ‘சென்செக்ஸ்’ 60 ஆயிரம் ...  ‘ஹரிஓம்  பைப் இண்டஸ்ட்ரீஸ்’ பங்கு வெளியீட்டுக்கு வருகிறது ‘ஹரிஓம் பைப் இண்டஸ்ட்ரீஸ்’ பங்கு வெளியீட்டுக்கு வருகிறது ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
60,000 புள்ளி அறுவடை செய்த ‘சென்செக்ஸ்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2021
22:33

மும்பை:அனை­வ­ரும் எதிர்­பார்த்­தி­ருந்த சாத­னையை இறு­தி­யில் நிகழ்த்தி விட்­டது, மும்பை பங்­குச் சந்­தை­யின் குறி­யீட்டு எண், ‘சென்­செக்ஸ்!’

கடந்த வியா­ழக் கிழ­மையே சென்­செக்ஸ் 60 ஆயி­ரம் புள்­ளி­க­ளைத் தாண்டி நிலை­பெற்று விடும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது. இருப்­பி­னும், மயி­ரி­ழை­யில் வாய்ப்பு தவறி விட்­டது.
இதை­ய­டுத்து, வெள்­ளிக்கிழமை அன்று எதிர்­பார்ப்பு மேலும் அதி­க­ரித்­தது. இம்­முறை அந்த சாதனை நிகழ்த்­தப்­பட்டு விட்­டது.கடந்த 1990ம் ஆண்டு ஜூலை மாதம், முதன் முத­லாக சென்­செக்ஸ் 1,000 புள்­ளி­க­ளைத் தொட்­டது. இப்­போது 31 ஆண்­டு­க­ளுக்குபின், 60 ஆயி­ரம் புள்­ளி­க­ளைத் தாண்­டி­யுள்­ளது.

இந்த 31 ஆண்­டு­களில் பல்­வேறு சிக­ரங்­க­ளை­யும், சறுக்­கல்­க­ளை­யும் சந்தை சந்­தித்­துள்­ளது.
கடந்த 1992ல் ஹர்­ஷத் மேத்தா மோசடி, 1993ல் மும்பை பங்­குச் சந்தை கட்­ட­டத்­தில் குண்டு வெடிப்பு, 1999ல் கார்­கில் போர், 2002ல் பார்லி.,யில் பயங்க­ர­வா­தி­கள் தாக்­கு­தல் என, பல தடை­
க­ளைத் தாண்­டியே இந்­நிலை எட்­டப்­பட்­டுள்­ளது.


கடந்த 2020 மார்ச்­சில் 23 சத­வீத சரிவை கொரோ­னா­வால் கண்­ட­தும் குறிப்­பி­டத்­தக்க
ஒன்­றா­கும். ஆனால், அதே கொரோனா பாதிப்­பு­க­ளுக்கு மத்­தி­யில் தான், நடப்பு ஆண்­டில் சென்­செக்ஸ் 50 ஆயி­ரம்; 60 ஆயி­ரம் புள்­ளி­கள் என உச்­சம் தொட்­டுள்­ளது.எட்டே மாதங்­களில் 50 ஆயி­ரம் புள்­ளி­க­ளி­லி­ருந்து, 60 ஆயி­ரம் புள்­ளி­க­ளுக்கு உயர்ந்­த­தும் ஒரு மகத்­தான சாதனை தான்.நேற்­றைய வர்த்­த­கத்­தில், தேசிய பங்­குச் சந்­தை­யின் குறி­யீட்டு எண், ‘நிப்டி’யும்
17 ஆயி­ரத்து 853 புள்­ளி­க­ளைத் தொட்டு, புதிய சிக­ரத்தை எட்­டி­யுள்­ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)