பண்டிகை கால செலவுகளை திட்டமிடுவது எப்படி? பண்டிகை கால செலவுகளை திட்டமிடுவது எப்படி? ... ஆயிரம் சந்தேகங்கள் ‘ஆன்லைன்’ சலுகைகளை நம்பி வாங்கலாமா? ஆயிரம் சந்தேகங்கள் ‘ஆன்லைன்’ சலுகைகளை நம்பி வாங்கலாமா? ...
பெட்ரோல் ‘கிரெடிட் கார்டு’கள் உங்களுக்கு ஏற்றவையா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 அக்
2021
18:53

‘கிரெடிட் கார்டு’களில் ஒரு வகையான குறிப்பிட்ட வர்த்தக நிறுவனத்துடன் இணைந்து வழங்கப்படும் கார்டுகள் வேகமாக பிரபலமாகி வருகின்றன. பயண நிறுவனங்கள், ‘இ – -காமர்ஸ்’ நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுடன் இணைந்து, கார்டு நிறுவனங்களால் இந்த வகை கார்டுகள் வழங்கப்படுகின்றன. இதே போல, வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பிக் கொள்வதற்கான தொகையை செலுத்த பெட்ரோல் கார்டுகள் வழங்கப்படுகின்றன. பெட்ரோல் நிறுவனங்களுடன் இணைந்து வழங்கப்படும் இந்த வகை கார்டுகள் அளிக்கும் பலன்களை பார்க்கலாம்.

‘கேஷ்பேக்’ சலுகைகள்:


பெட்ரோல் கார்டுகள் பணம் செலுத்தஎளிதான வழி என்பதோடு, ‘கேஷ்பேக்’ சலுகை, தள்ளுபடி மற்றும் பரிசுப் புள்ளிகள் உள்ளிட்ட சலுகைகளை அளிக்கின்றன. இந்த சலுகைகள் நிச்சயம் எரிபொருள் செலவை குறைக்க உதவும். பெட்ரோல் விலை அதிகரிக்கும் சூழலில் இது நிச்சயம் பலன் அளிக்கக் கூடியது.


யாருக்கு ஏற்றது?


‘கேஷ்பேக்’ போன்ற சலுகைகளை பெட்ரோல் கார்டுகள் அளித்தாலும், இவற்றின் மூலம் பலன் பெறுவது என்பது பல்வேறு அம்சங்களை பொருத்தே அமையும். பொதுவாக, பெட்ரோலுக்கு என்று தினந்தோறும் அல்லது மாதந்தோறும் அதிக அளவில் செலவு செய்பவர்களுக்கே இந்த கார்டுகள் பலன்மிக்கதாக அமையும்.


கட்டணங்கள் என்ன?


கார்டை தேர்வு செய்யும் முன், அதற்கான ஆண்டு கட்டணம், நுழைவு கட்டணம் போன்றவற்றையும் கவனிக்க வேண்டும். கார்டு நிறுவனங்கள் கட்டணம் தொடர்பான செலவு வரம்பையும் கொண்டிருக்கலாம். இந்த கட்டணங்களை கணக்கிட்ட பின், கார்டு பலன் அளிக்கும் வகையில் அமைய வேண்டும்.


பெட்ரோல் நிலையங்கள்:


கார்டுகள் அளிக்கும் சலுகைகள் பொருந்தக்கூடிய பெட்ரோல் நிலையங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். கேஷ்பேக் சலுகை, பரிசுப் புள்ளிகள் எந்த நிலையங்களுக்கு எல்லாம் பொருந்தும் என்பதை அறிய வேண்டும். அதே போல தாமதமாக கார்டு தொகையை செலுத்துவதற்கானகட்டணத்தையும் அறிய வேண்டும்.


செலவு கணக்கு:


கார்டு பயன்பாடு தொடர்பான பொடி எழுத்து நிபந்தனைகளையும் கவனமாக படிக்க வேண்டும். இந்த அம்சங்களை எல்லாம் பரிசீலித்து, கார்டு உண்மையில் பலன் அளிக்குமா என தீர்மானிக்கலாம். பொதுவாக, மாதந்தோறும் பெட்ரோலுக்காக செலவிடும் தொகை அதிகமாக இருந்தால், கார்டு மூலம் அதிக பயன் பெறலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)