பதிவு செய்த நாள்
07 டிச2021
20:51
புதுடில்லி:நாமே சுலபமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான வசதியை இலவசமாக வழங்குவதாக ‘டேக்ஸ்2வின்’ என்ற வலைதள நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த, 2020 – 21ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான ‘கெடு’ வரும், 31ம் தேதியுடன் முடிவடைகிறது.இது குறித்து டேக்ஸ்2வின் நிறுவனர் அபிஷேக் சோனி கூறியதாவது:வழக்கமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை சற்று சிக்கலானதாகவே இருக்கும்.
எந்தெந்த பிரிவினருக்கு எந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது என்பதில் குழப்பம் ஏற்படும். இந்த பிரச்னைக்கு, டேக்ஸ்2வின் தீர்வளிக்கிறது. தற்போது வருமான வரித் துறையில் கணக்கு தாக்கலுக்கு புகுத்தப்பட்டுள்ள புதிய மென்பொருளுடன் இணைந்து செயல்படும் வகையில், டேக்ஸ்2வின் வலைதளம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த வலைதளத்தில் இலவசமாக, வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தனி நபர், ஊதியதாரர், வர்த்தகர் என, அனைத்து தரப்பினருக்கும் அவரவர் தொழிலுக்கு ஏற்ற வகையில், மிக எளிமையாக தாமே வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|