பதிவு செய்த நாள்
20 ஜன2022
21:10
மும்பை:நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அடுத்த நிதியாண்டில் 7.6 சதவீதமாக இருக்கும் என, ‘இந்தியா ரேட்டிங்ஸ் அண்டு ரிசர்ச்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின், இந்திய பொருளாதாரம் நல்ல விரிவாக்கத்தை காட்டியுள்ளதாகவும், ரியல் ஜி.டி.பி., எனும், நிலையான மொத்த உள்நாட்டு உற்பத்தி, கொரோனாவுக்கு முந்தைய நிலையை விட அதிகமாக, 9.1 சதவீதமாக அதிகரித்து இருக்கும் என்றும், இந்தியா ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.
நடப்பு நான்காவது காலாண்டில், ஒமைக்ரான் தாக்கம் எதிர்பார்ப்பை விட அதிகம் இருப்பின், அது அடுத்த நிதியாண்டுக்கான ஒப்பீட்டில், சிறிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.மேலும், அரசும், ரிசர்வ் வங்கியும் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தின் துவக்கத்தில், தேசிய புள்ளியியல் அலுவலகம், நடப்பு நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.2 சதவீதமாக இருக்கும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|