விண்ணப்பித்தவர்களுக்கு இன்று பங்குகள் ஒதுக்கீடு விண்ணப்பித்தவர்களுக்கு இன்று பங்குகள் ஒதுக்கீடு ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
பணம் எடுக்க, செலுத்த ‘ஆதார், பான் கார்டு’ கட்டாயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2022
20:51

புதுடில்லி:வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தபால் அலுவலகங்களில், ஓர் நிதியாண்டில், 20 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பணம் செலுத்தினாலோ அல்லது எடுத்தாலோ, பான் மற்றும் ஆதார் எண் தெரிவிப்பது கட்டாயம் என, மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
இந்த புதிய விதிகள், இம்மாதம் 26ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.தற்போது, ஒரு நாளில் 50 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை ‘டெபாசிட்’ செய்தால், பான் எண் கட்டாயம் என உள்ளது. ஆனால் பணம் எடுப்பதற்கு தேவையில்லை. மேலும், இதற்கு ஆண்டு வரம்பு எதுவும் இல்லாமல் இருந்தது.

இந்த புதிய விதிகளின்படி, இனி ஒரு நிதியாண்டில், ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட கணக்குகளில் இருந்து, ஒருவர் 20 லட்சம் ரூபாயை தாண்டி பணம் எடுத்தாலும், போட்டாலும், பான் அல்லது ஆதார் எண் குறிப்பிடுவது கட்டாயம் ஆகிறது.இதன் வாயிலாக, ஒரு நிதியாண்டில், ஒருவர் மொத்தம் எவ்வளவு பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளார்; அதற்கு வரிப்பிடித்தம் செய்யப்பட்டுள்ளதா என்பதை வரி துறையினர் எளிதாக அறிந்துகொள்ள இயலும்.
புதிய விதிகள்:
1 வங்கி, தபால் அலுவலகம், கூட்டுறவு வங்கி போன்றவற்றில், ஒரு நபர், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கணக்கில், ஒரு நிதியாண்டில் 20 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை செலுத்துவதற்கு ஆதார் அல்லது பான் கார்டு கட்டாயம்
2 இதேபோல் ஒரு நிதியாண்டில் 20 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கணக்குகளிலிருந்து எடுப்பதற்கும் ஆதார் அல்லது பான் எண் கட்டாயம்.
3 வங்கி, தபால் அலுவலகம், கூட்டுறவு வங்கிகளில் நடப்புக் கணக்கு அல்லது ரொக்க கடன் கணக்கு துவங்கும்போதும், ஆதார் அல்லது பான் எண் கட்டாயம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)