‘இதாஸ்’ பங்கு வெளியீடு 18ம் தேதி  துவங்குகிறது ‘இதாஸ்’ பங்கு வெளியீடு 18ம் தேதி துவங்குகிறது ... இன்று பட்டியலிடப்படும் எல்.ஐ.சி., பங்குகள்;  மிகுந்த எதிர்பார்ப்பில் புதிய முதலீட்டாளர்கள் இன்று பட்டியலிடப்படும் எல்.ஐ.சி., பங்குகள்; மிகுந்த எதிர்பார்ப்பில் புதிய ... ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
எல்.ஐ.சி., பங்குகள் 'லிஸ்டிங்' பலன் எப்படி இருக்கும்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2022
05:54

எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பங்கு வெளியீடாக அமைந்துள்ள எல்.ஐ.சி., நிறுவனத்தின் பங்குகள், நாளை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.

சந்தையில் பட்டியலிடப்படும் போது, எல்.ஐ.சி., பங்குகள் பலன் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக முதலீட்டாளர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. 'கிரே மார்க்கெட்' என சொல்லப்படும் கள்ளச் சந்தையில், இந்த பங்குகளுக்கான விலை போக்கு இது தொடர்பாக முக்கியமாக கவனிக்கப்படுகிறது.

பங்கு வெளியீடு
இந்திய ஆயுள் காப்பீடு கழகமான எல்.ஐ.சி., நிறுவனத்தின் பொது பங்கு வெளியீடு இம்மாதம் 4ம் தேதி துவங்கி, 9ம் தேதி முடிவடைந்தது. நிறுவனத்தில் உள்ள 3.5 சதவீத பங்குகளை, அரசு பொது வெளியீடு வாயிலாக வழங்க தீர்மானித்தது. பொது பங்கு வெளியீட்டில், நிறுவன ஊழியர்கள் மற்றும் பாலிசிதாரர்களுக்கு சலுகை அளிக்கப்பட்டது. பாலிசிதாரர்கள் பங்கு வெளியீட்டில் பங்கேற்க, 'டிமெட்' கணக்கு பெறுவதும் அவசியம். நாட்டின் மிகப் பெரிய பங்கு வெளியீடு என வர்ணிக்கப்பட்ட இந்த வெளியீடு, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.சில்லரை முதலீட்டாளர்கள் மற்றும் நிதி கழக முதலீட்டாளர்கள் இந்த பங்கு வெளியீட்டிற்கு ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். இந்த பங்கு வெளியீடு, கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிக விண்ணப்பங்களை ஈர்த்தது. சில்லரை முதலீட்டாளர்கள் பிரிவில் இரண்டு மடங்கு அளவு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.பாலிசிதாரர்கள் மற்றும் ஊழியர்கள் பிரிவிலும் அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. எல்.ஐ.சி., பங்கு ஒன்றுக்கான விலை வரம்பு 902- - 949 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. விண்ணப்பித்தவர்களுக்கு பங்குகள் ஒதுக்கீடும் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒதுக்கீடு பெறாதவர்களுக்கு நிறுவனம் சார்பாக குறுஞ்செய்தியில் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பட்டியல் பலன்
இந்நிலையில், எல்.ஐ.சி., பங்குகள் நாளை சந்தையில் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்டியலிடப்படும் போது பங்குகள் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக முதலீட்டாளர்கள் பின்பற்ற வேண்டிய உத்தி பற்றியும் பரவலாக விவாதிக்கப்படுகிறது.எல்.ஐ.சி., நீண்ட கால மற்றும் குறுகிய கால நோக்கில் பலன் அளிக்கவல்லது என்று கருதப்படுகிறது. இதனிடையே, கிரே மார்க்கெட்டில் நிறுவன பங்குகளுக்கான விலை போக்கும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. துவக்கத்தில் இது அதிகமாக இருந்தது, பங்குச் சந்தை நோக்கர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.சந்தையில் பட்டியலிடப்படும் போது பங்கின் விலை பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் அமையலாம் என கருதப்படுகிறது. சந்தையின் ஏற்ற இறக்கமான போக்கு உள்ளிட்ட அம்சங்களும் தாக்கம் செலுத்தலாம். பங்குகள் அதிக விலைக்கு பட்டியலிடப்பட்டால், அதற்கேற்ப பட்டியலிடும் ஆதாயம் அமையும்.அதே நேரத்தில் பட்டியலிடப்படும் பலனை மட்டும் பார்க்காமல், முதலீட்டாளர்கள் நீண்ட கால அணுகுமுறையை மனதில் கொள்ள வேண்டும் என்றும் வல்லுனர்கள் கருதுகின்றனர். அனைத்து விதமான அம்சங்களையும் பரிசீலித்தே முதலீட்டாளர்கள் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.பட்டியலிடப்படும் பலனை மட்டும் பார்க்காமல், சந்தை அம்சங்களுக்கு ஏற்ப காத்திருந்து முடிவெடுக்கும் அணுகுமுறையையும் பின்பற்றுவது பொருத்தமாக இருக்கும் என்கின்றனர்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
business news
புதுடில்லி:பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’, 5 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)