பதிவு செய்த நாள்
19 மே2022
20:08
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என்றும், ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இது குறித்து, அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:உக்ரைன் போர் காரணமாக, உலக பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், உலக வளர்ச்சி நடப்பு ஆண்டில் 3.1 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன், கடந்த ஜனவரியில், உலக வளர்ச்சி 4.0 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. இந்தியாவை பொறுத்தவரை, உலக நாடுகளில் வேகமான வளர்ச்சி கொண்ட நாடாக அது இருக்கும். இருப்பினும், பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால், நுகர்வு மற்றும் முதலீடுகள் பாதிக்கப்படும்.
இதனால், 2021ல், வளர்ச்சி 8.8 சதவீதமாக இருந்தது, நடப்பு ஆண்டில் 6.4 சதவீதமாக குறைந்து இருக்கும்.ஆனாலும், உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது, வேகமான வளர்ச்சி கொண்டதாக இருக்கும். குறுகிய காலத்தின் அதன் வளர்ச்சி வலுவானதாக இருக்கும்.
இத்தகைய வளர்ச்சி, மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு தொடரும். இருப்பினும், வேறு புறக் காரணங்களால் வளர்ச்சி பாதிப்படைய வாய்ப்பு இருப்பதையும் மறுப்பதற்கு இல்லை. நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும்.இவ்வாறு தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|