பொருளாதார வளர்ச்சி குறைவாகவே இருக்கும்பொருளாதார வளர்ச்சி குறைவாகவே இருக்கும் ... தங்கம் வெள்ளி சந்தை தங்கம் வெள்ளி சந்தை ...
வர்த்தக துளிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2022
21:54

சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு

உள்நாட்டில் சர்க்கரை விலை உயர்ந்து வருவதை அடுத்து, ஜூன் முதல் தேதியிலிருந்து, சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது, மத்திய அரசு.பண்டிகை காலத்தில் விலை அதிகரிக்காமல் இருக்க, ஜூன் முதல் தேதியிலிருந்து, ஒரு கோடி டன் அளவுக்கு மட்டுமே சர்க்கரையை ஏற்றுமதி செய்ய முடியும் என அறிவித்துள்ளது, அரசு.பங்கு வெளியீட்டில் ‘டிஜிட்’ ‘டிஜிட்’ இன்சூரன்ஸ் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, 3,900 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டு வருகிறது.இந்நிறுவனம், வரும் செப்டம்பரில் விண்ணப்பித்து, ஜனவரியில் பங்குகளை சந்தையில் பட்டியலிட திட்டமிட்டுள்ளது.

ஜோஹோ ரூ.20 கோடி முதலீடு

சென்னையை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான ‘ஜோஹோ’, இந்தியாவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ‘ஜென்ரோபோட்டிக்ஸ்’ நிறுவனத்தில், 20 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.ஜென்ரோபோட்டிக்ஸ் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் தயாரிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது.பி_நோட் முதலீடு அதிகரிப்புஇந்திய மூலதன சந்தையில், ‘பி_நோட்’ எனும் பங்கேற்பு பத்திரங்கள் வாயிலாக செய்யப்படும் முதலீடு, ஏப்ரல் மாதத்தில் சற்று அதிகரித்துள்ளது.ஏப்ரலில், பி நோட் முதலீடு 90 ஆயிரத்து, 580 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.


அன்னிய முதலீட்டாளர்கள் பார்வை


சீனாவிலிருந்து இந்தியா பக்கம் திரும்பி உள்ளதால் இந்த அதிகரிப்பு.அதானி லாபம் சரிவு ‘அதானி போர்ட்ஸ் அண்டு ஸ்பெஷல் எக்கனாமிக் ஸோன்’ நிறுவனத்தின் நிகர லாபம், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 21.78 சதவீதம் சரிந்துள்ளது.இக்காலாண்டில், இந்நிறுவனத்தின் நிகர லாபம் 1,033 கோடி ரூபாயாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலாண்டில், லாபம் 1,321 கோடி ரூபாயாக இருந்தது.சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு
உள்நாட்டில் சர்க்கரை விலை உயர்ந்து வருவதை அடுத்து, ஜூன் முதல் தேதியிலிருந்து, சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது, மத்திய அரசு.

பண்டிகை காலத்தில் விலை அதிகரிக்காமல் இருக்க, ஜூன் முதல் தேதியிலிருந்து, ஒரு கோடி டன் அளவுக்கு மட்டுமே சர்க்கரையை ஏற்றுமதி செய்ய முடியும் என அறிவித்துஉள்ளது, அரசு.



பங்கு வெளியீட்டில் ‘டிஜிட்’

‘டிஜிட்’ இன்சூரன்ஸ் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, 3,900 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டு வருகிறது.

இந்நிறுவனம், வரும் செப்டம்பரில் விண்ணப்பித்து, ஜனவரியில் பங்குகளை சந்தையில் பட்டியலிட திட்டமிட்டுள்ளது.



‘ஜோஹோ’ ரூ.20 கோடி முதலீடு

சென்னையை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான ‘ஜோஹோ’, இந்தியாவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ‘ஜென்ரோபோட்டிக்ஸ்’ நிறுவனத்தில், 20 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.

ஜென்ரோபோட்டிக்ஸ் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் தயாரிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது.



‘பி – நோட்’ முதலீடு அதிகரிப்பு

இந்திய மூலதன சந்தையில், ‘பி -– நோட்’ எனும் பங்கேற்பு பத்திரங்கள் வாயிலாக செய்யப்படும் முதலீடு, ஏப்ரல் மாதத்தில் சற்று அதிகரித்துள்ளது.

ஏப்ரலில், பி -– நோட் முதலீடு 90 ஆயிரத்து 580 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அன்னிய முதலீட்டாளர்கள் பார்வை சீனாவிலிருந்து இந்தியா பக்கம் திரும்பி உள்ளதால் இந்த அதிகரிப்பு.



அதானி லாபம் சரிவு

‘அதானி போர்ட்ஸ் அண்டு ஸ்பெஷல் எக்கனாமிக் ஸோன்’ நிறுவனத்தின் நிகர லாபம், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 21.78 சதவீதம் சரிந்துள்ளது.

இக்காலாண்டில், இந்நிறுவனத்தின் நிகர லாபம் 1,033 கோடி ரூபாயாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலாண்டில், லாபம் 1,321 கோடி ரூபாயாக இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)