'டாஸ்மாக்' கடைகளில் பீருக்கு தட்டுப்பாடு'டாஸ்மாக்' கடைகளில் பீருக்கு தட்டுப்பாடு ... வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்வு: சவரன் 15 ஆயிரம் ரூபாயையும் தாண்டியது வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்வு: சவரன் 15 ஆயிரம் ரூபாயையும் ... ...
ரிசர்வ் வங்கி துணை கவர்னர் உஷா தோரட் ஓய்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2010
02:03

மும்பை: ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் உஷா தோரட், பதவியிலிருந்து நேற்று ஓய்வு பெற்றார். மத்திய ரிசர்வ் வங்கியில் கடந்த 38 ஆண்டுகளாக பணியாற்றி, பல்வேறு பொறுப்புகளை வகித்து, துணை கவர்னர் பதவிக்கு வந்தவர் உஷா தோரட். சென்னையில் பிறந்த இவர், டில்லியில் கல்லூரி படிப்பை முடித்தார். மத்திய ரிசர்வ் வங்கியில், 1972ல் பணிக்கு சேர்ந்த உஷா, 2005 நவம்பர் 10ம் தேதி துணை கவர்னராக பதவியேற்றார். ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குனர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார். பாங்க் ஆப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் பாங்க், நபார்டு வங்கிகளின் நிர்வாக குழுவிலும் இருந்துள்ளார். ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைகளை உருவாக்குவது உட்பட, வங்கியின் பல்வேறு நடவடிக்கைகளில் முக்கிய இடம் பிடித்துள்ளார். இவருக்கு இரண்டாண்டுகளுக்கு பதவி நீட்டிப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிதியமைச்சகம் மறுத்துவிட்டதை தொடர்ந்து, உஷா தோரட், பதவியிலிருந்து நேற்று ஓய்வு பெற்றார். இவருடன் துணை கவர்னராக உள்ள சியாமளா கோபிநாத், கடந்த 10 மாதத்திற்கு முன்பு தான், இரண்டாண்டுக்கு பதவி நீட்டிப்பு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. துணை கவர்னர்களாக உள்ளவர்கள் 62 வயது வரை பதவியில் நீடிக்கலாம் என்ற நடைமுறை இருந்துவந்தது. ஆனால், உஷா விஷயத்தில் இந்த நடைமுறையை முடிவுக்கு கொண்டு வந்து, நிதியமைச்சகம் அதிரடி முடிவை எடுத்துள்ளது. ரிசர்வ் வங்கியில் துணை கவர்னர் நிலையில் அதிகம் பேர் உள்ளதால், இந்த நடைமுறை தொடர்ந்தால், பிரச்னை வரும் என்ற எண்ணத்தில் நிதியமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்தின் தலைவர், நரேஷ் கோயல் பதவி விலகினார்.நரேஷ் கோயல், தன் மனைவி, அனிதா ... மேலும்
business news
புதுடில்லி: தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு, வலைதளம் மூலம் ஏற்றுமதி உரிமம் பெறும் வசதியை, மத்திய வர்த்தகம் ... மேலும்
business news
புதுடில்லி : ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த தாஸ், நேற்று, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லியை சந்தித்து ... மேலும்
business news
திருப்பூர் : நடப்பு மார்ச் மாதம் முதல் வாரத்திலிருந்து, பஞ்சு விலை உயர்ந்து வருகிறது. தற்போது, 1 கேண்டி பஞ்சு ... மேலும்
business news
ரகுராம் ராஜன் மீண்டும் பேசு பொருளாகி இருக்கிறார். முதலாளித்துவம் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளது என்று ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)