பதிவு செய்த நாள்
09 மார்2011
13:00

புதுடில்லி : சர்வதேச அளவில், மருத்துவச் சேவை வழங்குவதில் முன்னணியில் உள்ள போர்டிஸ் ஹெல்த்கேர் லிமிடெட் நிறுவனம், உத்தர்காண்ட் மாநிலம் டேராடூனில் கார்டியாக் சென்டர் அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, போர்டிஸ் ஹெல்த்கேர் லிமிடெட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் ஒத்துழைப்போடு இந்த சென்டர் அமைக்கப்பட உள்ளது. தற்போது, டேராடூனில் அமைக்கப்பட உள்ள இந்த சென்டரையும் சேர்த்து, தங்கள் நிறுவனம், 8 ஆயிரம் படுக்கைகளை கொண்ட 55 மருத்துவமனைகளை நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில், புகழ்பெற்ற தங்கள் நிறுவனம், இந்தியாவின் டயர் 2 நகரங்களிலும் சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக, இன்ப்ராஸ்ட்ரெக்சர் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட மேம்பாட்டு நடவடிக்கைகளில் களமிறங்கி உள்ளோம். இந்த கார்டியாக் சென்டர், நவம்பர் மாதத்தில் செயல்பட துவங்கும் என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|