பதிவு செய்த நாள்
09 மார்2011
16:30

சென்னை : அமெரிக்காவின் முன்னணி இண்டஸ்டீரியல் பம்புகளை உற்பத்தி செய்யும் நிறுவனமான கனாடியன் கிளியர் வாடெக் எல்எல்சி நிறுவனம், சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கனாடியன் கிறிஸ்டலைன் வாட்டர் இந்தியா லிமிடெட்டுடன் இணைந்து அடுத்த தலைமுறை உபயோகத்திற்கான இண்டஸ்டிரியல் பம்புகளை வர்த்தகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, கனாடியன் கிளியர் வாடெக் எல்எல்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தியாவில் வர்த்தகத்தை அதிகரிக்கும் பொருட்டு, சென்னை நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளோம். இதன் முதற்கட்டமாக, 5 புதிய வகை இண்டஸ்டிரியல் பம்புகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். தங்கள் நிறுவன பம்புகள் விலை குறைவாக இருப்பதோடு மட்டுமல்லாமல், மெயின்டெனன்ஸ் செலவும் அதிகமாக இருக்காது என்பது தங்களின் தனிச்சிறப்பு. தற்போது தாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள இண்டஸ்டிரியல் பம்புகள், அனைத்து தரப்பு தொழிற்சாலைகளையும் கவரும். இதன் எதிரொலியாக, வரும் ஆண்டுகளில் இந்தியாவில் வர்த்தகத்தை அதிகரிக்க திட்டமிட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|