ஆம்கோ பேட்டரிஸ் ஜெயஸ்ரீ வெங்கட்ராமன் தலைவராக பொறுப்பேற்புஆம்கோ பேட்டரிஸ் ஜெயஸ்ரீ வெங்கட்ராமன் தலைவராக பொறுப்பேற்பு ... வங்கிகளில் உரிமை கோரப்படாத நிலையில் ரூ.1,700 கோடி இருப்பு வங்கிகளில் உரிமை கோரப்படாத நிலையில் ரூ.1,700 கோடி இருப்பு ...
சாதனை படைக்குது வெள்ளி வர்த்தகம் இரண்டு மாதத்தில் ரூ.8,000 அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2011
00:20

- என்.சரவணன் - தங்கத்தில் மேற்கொள்ளப்படும் முதலீட்டை காட்டிலும், வெள்ளியில் செய்யும் முதலீடு அதிக லாபம் அளிப்பதாக உள்ளது. கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் கிலோவுக்கு 8,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் தங்க ஆபரணத்தின் விலை 'ஜெட்' வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த சில மாதங்களாக பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு நிலை, முதலீட்டாளர்களின் பார்வையை தங்கத்தின் மீது திருப்பியுள்ளது.இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டது. அதே போன்று, வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்து கொண்டே வந்தது. விலை உயர்ந்தாலும், மக்களின் வாங்கும் ஆர்வம் குறையவில்லை.இந்நிலையில், ஆபரணத் தங்கத்தை விட, வெள்ளியில் மேற்கொள்ளப்படும் முதலீடு, அதிக லாபம் அளிப்பதாக உள்ளது. கடந்தாண்டு, வெள்ளியில் முதலீடு செய்தவர்களுக்கு அபரிமிதமான லாபம் கிடைத்துள்ளது.கடந்த 2009, டிச., 31ல், 29.35 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் வெள்ளி, 2010, டிச., 31ல், 49.75 ரூபாய்க்கு உயர்ந்தது. அதாவது, கிராமுக்கு 20.40 ரூபாய் அதிகரித்து, 69 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இந்த சாதனை, இந்தாண்டும் தொடர்கிறது. கடந்த ஜன., 1ம் தேதி, ஒரு கிராம் வெள்ளி 49.40 ரூபாய்க்கும், ஒரு கிலோ 46,150 ரூபாய்க்கும் விற்பனையானது. பிப்., 1ல், 46.90 ரூபாயாகவும், கிலோ 43,850க்கும், மார்ச் 1ம் தேதி, கிராம் 55 ரூபாய்க்கும், கிலோ 51,405க்கும் விற்பனையானது. இந்நிலையில், நேற்று, வெள்ளி விலை எட்டாத உயரத்தை அடைந்தது. ஒரு கிராம் வெள்ளி விலை 58.25 ரூபாயாகவும், கிலோ 54,455 ரூபாயாகவும் இருந்தது. இதன்படி, கடந்த இரண்டு மாதத்தில் மட்டும், வெள்ளி, கிலோவுக்கு 8,305 ரூபாய் உயர்ந்துள்ளது. இதே கால கட்டத்தில், தங்கம் கிலோவுக்கு 2,500 ரூபாய் மட்டுமே, விலை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜன.,1ல் 1,928க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கம், பிப்.,1ல் 1,872, மார்ச் 1ல் 1,940 என்ற ரீதியில் விற்பனையானது. நேற்று காலை நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் 1,960 ரூபாய்க்கு விற்பனையானது.இது குறித்து தங்கம், வெள்ளி நகை வியாபாரி ஒருவர் கூறுகையில், 'தற்போது வெள்ளியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆபரணத்திற்காக மட்டுமல்லாமல், முதலீடாகவும் பலர் வெள்ளியை வாங்குகின்றனர். இதனால் தான், வெள்ளி விலை உயர்ந்துள்ளது. இது, மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது' என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)