பதிவு செய்த நாள்
25 மார்2011
11:23
சென்னை : இந்தியாவின் முன்னணி சைக்கிள்கள் தயாரிப்பு நிறுவனமான டிஐ சைக்கிள்ஸ் நிறுவனம், இந்தியாவின் முதல் கார்பன் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, சென்னையில் நடைபெற்ற கார்பன் சைக்கிள் அறிமுக நிகழ்ச்சிக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த டிஐ சைக்கிள்ஸ் இந்தியா நிறுவன தலைவர் டாக்டர் ரகுராம் கூறியதாவது, தாங்கள் அறிமுகம் செய்துள்ள இந்த கார்பன் சைக்கிள், இளைய தலைமுறையினரை பெரிதும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சைக்கிளின் விலை ரூ. 21 ஆயிரத்திலிருந்து ரூ. 1.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சைக்கிள்கள், அம்பத்தூரில் உள்ள யூனிட்டில் தயாரிக்கப்பட உள்ளது. இந்த சைக்கிளின் வெற்றியைத் தொடர்ந்து, விரைவில் அலாயால் ஆன கார்பன் சைக்கிள் வெளியிட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டில், 3.6 மில்லியன் சைக்கிள்களை விற்பனை செய்த தங்கள் நிறுவனம், இந்தாண்டில், 4.15 மில்லியன் சைக்கி்ள்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|