465 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்தது பங்குவர்த்தகம்465 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்தது பங்குவர்த்தகம் ... முன்பேர வர்த்தகம் வெளிப்படையானது முன்பேர வர்த்தகம் வெளிப்படையானது ...
இனி எஸ்எம்எஸ்சில் மருந்துகளின் நம்பகத்தன்மை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2011
16:42

மும்பை : உயிர்காக்கும் மருந்துகளின் நம்பகத்தன்மை குறித்த தகவல்கள் இனி எஸ்எம்எஸ் எனப்படும் குறுந்தகவல்கள் மூலம் அறிந்துகொள்வதற்கான வசதியை பார்மாசெக்யூர் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.சமீபத்தில், தமிழகத்தில் போலி மருந்துகள் தொடர்பாக 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து கோடி ரூபாய் மதிப்பிற்கும் மேலான போலி மருந்துகள் கைப்பற்றதோடு மட்டுமல்லாது, சென்னையின் மையப்பகுதியில் செயல்பட்டு வந்த குடவுனிற்கும் ‌போலீசார் சீல்வைத்தனர். இதுவரை, மார்க்கெட்டில் விற்பனைக்கு இருந்த மருந்துகள் போலியானவை என்ற தகவல் தெரிந்தபின், மக்கள் பேரதிர்ச்சிககு உள்ளாயினர். இதன்பிறகும், மக்களால் எது உண்மை? எது போலி என்பது குறித்த விபரங்கள் இதுவரை தெரியாதவண்ணமே உள்ளது. இந்நிலையில், மருந்து தயாரிப்பு நிறுவனங்களை கண்காணித்து, அவர்கள் போலி மருந்துகளை விற்பனை செய்கி்ன்றனரா? காலாவதியான மருந்துகளை அவர்கள் என்ன செய்கிறார்கள் உள்ளிட்ட தகவல்களை சேகரிக்கும் வண்ணம் பார்மாசெக்யூர் நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிறுவனம், இதுவரை 50க்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு பிரத்யேக கோடு வழங்கியுள்ளது. பார்மாசெக்யூர் நிறுவனம் வழங்கும் இந்த பிரத்யேக கோடை பெறும் நிறுவனங்கள், நம்பிக்கைக்கு உரியது என்று கருத்தில் கொள்ளலாம். அத்தகைய சிறப்புடைய இந்த பார்மாசெக்யூர் நிறுவனம், விரைவில் மருந்துகளின் நம்பகத்தன்மை குறித்து எஸ்எம்எஸ் எனப்படும் குறுந்தகவல்களின் மூலம் நம்பகத்‌தன்மை குறித்த விபரங்களை மக்களுக்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பார்மாசெக்யூர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் நாதன் சிக்வொர்த் கூறியதாவது, இதன்மூலம், போலி மருந்துகள் விற்பனை தடுக்கப்படும் என்றும், மக்கள் நிம்மதியாக மருந்துகளை பயன்படுத்தி தங்களின் உடல்நலக் குறைபாடுகளை போக்கிக் கொள்ளலாம் என்று அவர் கூறினார். இதுகுறித்து, பார்மாசெக்யூர் நிறுவனத்தின் இயக்குனர் கிஷோர் ஃகார் கூறியதாவது, மக்கள், தாங்கள் பயன்படுத்தும் மருந்தின் நம்பகத்தன்மை குறித்து அறிய, அந்த குறிப்பிட்ட மருந்தின் மீது பொறிக்கப்பட்டுள்ள பிரத்யேக கோடை 9901099010 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் செய்தால், அந்த மருந்து குறித்த விபரங்கள் தங்களை வந்தடையும் என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்
business news
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்
business news
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்
business news
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)