பதிவு செய்த நாள்
28 மார்2011
16:59
மும்பை : அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் பிராட்கேஸ்ட் நெட்வொர்க் லிமிடெட் (ஆர்பிஎன்எல்), புதிதாக 'பிக்மாஜிக்' என்ற இந்த பொழுதுபோக்கு சேனலை துவக்க உள்ளதாக தெரிவி்த்துள்ளது. இதுகுறித்து, ரிலையன்ஸ் பிராட்கேஸ்ட் நெட்வொர்க் லிமிடெட் வெளியிட்டுள்ள செய்தி்ககுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போது, இந்த புதிய பிக்மாஜிக் சேனலை துவக்குவதன் மூலம், இந்த மொழி பேசும் பல்லாயிரக்கணக்கானவர்களின் கவனத்தை கவர்ந்துள்ளதாகவும், இதுமட்டுமல்லாது, மண்டல தொலைக்காட்சி பிரிவிலும் தங்கள் நிறுவனம் களமிறங்கி உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேனல், ஏப்ரல் 4ம் தேதி அதிகாரப்பூர்வமாக துவக்கப்பட இருப்பதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்பிஎன்எல் ஏற்கனவே , பிக் சிபிஎஸ் மற்றும் பிக் சிபிஎஸ் லவ் என்ற பெயரில் 2 ஆங்கில சேனல்களை நிர்வகித்துவருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|