பதிவு செய்த நாள்
30 மார்2011
10:05

மும்பையில் : மொகாலியில் இன்று நடைபெற உள்ள உலககோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில், 'சண்டைக்கார நண்பர்களான' இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியைக் காண இருநாட்டு பிரதமர்கள் உள்ளிட்ட இந்த உலகமே, தங்களது பார்வையை மொகாலி பக்கம் திருப்பியுள்ளது. இந்த போடடியைக் காண லட்சக்கணக்கானோர், மொகாலியை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். கிரிக்கெட் ரசிகர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம், டில்லி மற்றும் மும்பையிலிருந்து சண்டிகாருக்கு 2 கூடுதல் விமானங்களை இயக்க ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இயக்குகிறது. இதுதொடர்பாக, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, டில்லியிலிருந்து காலை 06.30 மணிக்கு புறப்பட்ட விமானம். காலை 07.30 மணிக்கு சண்டிகாரை வந்தடைந்தது அதேபோல, மும்பையில் இருந்து காலை 03.50 மணிக்கு புறப்பட்ட விமானம், காலை 6 மணி அளவில் சண்டிகாரை வந்தடைந்தது. இந்த விமானங்கள் மீண்டும் நாளை புறப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் விமானங்கள் உட்பட மும்பை மற்றும் டில்லியிலிருந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 3 விமானங்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|