பதிவு செய்த நாள்
30 மார்2011
10:40

கொச்சி : சர்வதேச அளவில் விலை உயர்ந்து வருவதால், நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் காபி ஏற்றுமதி 54 சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் காபி உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் நாடுகளுள் ஒன்றான பிரேசிலில் பருவநிலை கோளாறால் காபி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உலக அளவில் காபி விலை அதிகரித்து வருகிறது. இது, இந்திய காபி ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமான அம்சமாகும். இந்தியாவில் உற்பத்தியாகும் காபியில் 80 சதவீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகிறது. நடப்பு நிதி ஆண்டில், காபி ஏற்றுமதி 3 லட்சம் டன்னை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற நிதி ஆண்டுடன் (1,95,068 டன்) ஒப்பிடும்போது இது 54 சதவீதம் அதிகமாகும். இந்திய காபி ஏற்றுமதியாளர்கள், காபி கொட்டைகளை அதிக அளவில் இறக்குமதி செய்துள்ளனர். இதனால், மதிப்பு கூட்டப்பட்ட காபி ஏற்றுமதியிலும் விறுவிறுப்பு ஏற்படும். வரும் நிதி ஆண்டில் நாட்டில் காபி உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது. சர்வதேச அளவிலும் விலை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வரும் நிதி ஆண்டில் ஏற்றுமதியில் அதிக வளர்ச்சி ஏற்பட வாய்ப்பில்லை என்று வர்த்தக நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|