பதிவு செய்த நாள்
30 மார்2011
11:17

புதுடில்லி : தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு, சர்வதேச அளவில் எலெக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள் தயாரிப்பு மற்றும் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள எல்ஜி நிறுவனம், இந்தியாவில் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் பொருட்டு, ரூ. 1,500 கோடி முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவன உயர் அதிகாரி ஒய்.வி.வர்மா கூறியதாவது, உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக, ரூ. 800 கோடியும், பிராண்ட் தரமுயர்த்துவதற்காக மற்றும் மார்க்கெட்டிங் செயல்பாடுகளுக்காக, ரூ. 700 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். உற்பத்தித்திறனை மேம்படுத்தும் திட்டத்தின் ஒருபகுதியாக, புனேயில் புதிதாக ரெப்ரிஜிரேட்டர் தயாரிப்பு யூனிட் அமைக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.2011ம் ஆண்டில், ரூ. 20 ஆயிரம் கோடி அளவிற்கு வர்த்தகம் மேற்கொள்ள திட்டமி்ட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|