பதிவு செய்த நாள்
30 மார்2011
14:37
புதுடில்லி : நாட்டின் இரும்புத்தாது ஏற்றுமதி, தொடர்ந்து 8வது முறையாக சரிவு நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி மாதத்தில், நாட்டின் இரும்புத்தாது ஏற்றுமதி 18.60 சதவீதம் குறைந்து 10.13 மில்லியன் டன்னாக பதிவாகி உள்ளது. அதேபோல், ஸ்டீல் ஏப்ரல் முதல் பிப்ரவரி மாத காலகட்டத்தில், ஸ்டீல் ஏற்றுமதி 17.98 சதவீதம் குறைந்து 85.43 மில்லியன் டன்னாக உள்ளது. 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், ஏற்றுமதி 12.54 மில்லியன் டன்னாக பதிவாகி இருந்தது. நாட்டின் இரும்புத்தாது ஏற்றுமதி சதவீதம் தொடர்ந்து குறைந்து வருவதற்கு, கர்நாடக மாநிலம் இரும்புத்தாது ஏற்றுமதிக்கு தடை விதித்திருபபதும், மேலும் இந்த பட்ஜெட்டில், இரும்புத்தாதுவிற்கு 20 சதவீதம் ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டிருப்பதும் காரணம் என பெடரேசன் ஆப் இந்தியன் மினரல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|