பதிவு செய்த நாள்
31 மார்2011
03:03

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், புதன் கிழமையன்று, சிறப்பாக இருந்தது. அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு மேற்கொண்டு வருவதாலும், உலகின் பல்வேறு நாடுகளில் பங்கு வியாபாரம் நன்கு இருந்ததாலும், பல துறைகளைச் சேர்ந்த நிறுவன பங்குகள், அதிக விலைக்கு கைமாறின.புதன் கிழமையன்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், மருந்து, வங்கி, பொறியியல், மோட்டார் வாகனம், நுகர்பொருள்கள் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவன பங்குகளின் விலை அதிகரித்திருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 169.38 புள்ளிகள் அதிகரித்து, 19,290.18 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 19,357.10 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 19,178.77 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 23 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தும், 7 நிறுவன பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையிலும் வர்த்தகம் நன்கு இருந்தது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 51.30 புள்ளிகள் உயர்ந்து, 5,787.65 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,803.15 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,753.90 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|