பதிவு செய்த நாள்
01 ஏப்2011
14:27
ஜம்மு : 2009-10 ம் நிதியாண்டில் காஷ்மீரில் 83 குவிண்டாலுக்கும் அதிகமாக குங்குமப்பூ உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீர் அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற கூட்டத்தில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த காஷ்மீர் வேளாண்மைத்துறை அமைச்சர் குலாம் ஹசன் மிர் இத்தகவலை தெரிவித்துள்ளார். இதில் காஷ்மீரின் பாம்போர் பகுதியில் மட்டும் 80 குவிண்டால் குங்குமப்பூ உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 3.60 குவிண்டால் குங்குமப்பூ ஜம்முவின் கிஷ்துவர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2010-11ம் நிதியாண்டில் குங்குமப்பூ உற்பத்தி செய்யப்படும் நிலங்களின் அளவு 3785 ஹெக்டேராக அதிகப்படுத்தப்பட உள்ளதாக குலாம் ஹசன் மிர் தெரிவித்துள்ளார். குங்குமப்பூ உற்பத்தியை மேலும் அதிகரிக்கச் செய்ய ரூ.372.18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|