பதிவு செய்த நாள்
03 ஏப்2011
15:11
சென்னை : 2011ம் ஆண்டில் இந்தியாவில் 1.6 மில்லியன் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட உள்ளது. இந்தியாவில் வேலைவாய்ப்பு குறித்து ஆய்வு நடத்தும் மா ஃபோய் ரேன்ஸ்டட் நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் 2011ல் இந்தியாவில் 1.6 மில்லியன் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட உள்ளதாக மா ஃபோய் ரேன்ஸ்டட் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் பாலாஜி தெரிவித்துள்ளார். இந்தியா, சீனா போன்ற நாடுகள் உலக அளவில் பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சி பெற்று வருவதாகவும் இது தொழில்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவதாகவும் அதன் மூலம் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2011ல் மருத்துவத்துறை, ரியல் எஸ்டேட், கட்டிடத்துறை, ஐ.டி., துறை, மீடியா மற்றும் பொழுதுபோக்குத்துறை ஆகியவற்றில் பெருமளவில் வேலைவாய்ப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவ துறையில் மட்டும் 2,48,500 புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|