பதிவு செய்த நாள்
06 ஏப்2011
11:21
மும்பை : புளூ மோஷன் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு, ஏழாம் தலைமுறை சேடான் காரான 'பஷாட்'டை, வோக்ஸ்வாகன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மும்பையில் நடைபெற்ற கார் அறிமுக நிகழ்ச்சிக்குப் பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த வோக்ஸ்வாகன் பயணிகள் கார்கள் பிரிவின் உயர் அதிகாரி நீரஜ் கார்க் கூறியதாவது, இந்த கார், புளூ மோஷன் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம், இஞ்ஜின் தொடர்ந்து சிறிதுநேரமாக செயல்படாமல் இருந்தாலோ அல்லது பிரேக் சிஸ்டம் செயலிழந்து போகும்போதோ, இஞ்ஜின் ஆப் ஆகிவிடும், நெருக்கடியான இடங்களில் காரை நிறுத்துவதற்கு, டிரைவருக்கு 'அட்டென்சன் அசிஸ்ட் சிஸ்டம்' உதவி செய்யும், எரிபொருள் செயல்திறன் மிக்கதாகவும் மற்றும் எமிசனை குறைக்கும் வடிவிலும் உருவாக்கப்பட்டுள்ள இந்த காரின் முன்பதிவு தற்போது துவங்கி உள்ளதாகவும், ஏப்ரல் மாத இறுதியில், கார் டெலிவரி துவங்க உள்ளது. ஆட்டோமெட்டிக் மற்றும் மானுவல் டிரான்ஸ்மிசன் ஆப்சன்களில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார் 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வர உள்ளது. இந்த காரின் விலை (டில்லி எக்ஸ் ஷோரூம் விலை) ரூ. 20.80 லட்சத்திலிருந்து ரூ. 25.65 லட்சமாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|