பதிவு செய்த நாள்
25 ஏப்2011
10:54
ஐதராபாத் : இன்ப்ராஸ்ட்ரெக்சர் துறையில் ஸ்டீலின் பயன்பாடு உள்ளிட்ட சேவைகளை வழங்கி வரும் பென்னார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், இந்த நிதியாண்டின் (2010-11) நான்காம் காலாண்டில், நிகரலாபம் 38.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பென்னார் இண்டஸ்ட்ரீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த இந்த நிதியாண்டின் (2010-11)நான்காம் காலாண்டில், நிறுவனத்தின் விற்பனை 31 சதவீதம் அதிகரித்து ரூ. 341.7 கோடி என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது. இதன்காரணமாக, நிறுவன நிகரலாபமும் 38.2 சதவீதம் அதிகரித்து ரூ. 19.1 கோடியாக அதிகரித்துள்ளது. 2010-11ம் ஆண்டின் ஒட்டுமொத்த நிகர விற்பனை 54.2 சதவீதம் அதிகரித்து ரூ. 1,372.8 கோடியாக அதிகரித்துள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|