பதிவு செய்த நாள்
25 ஏப்2011
11:55
மும்பை : மூன்று சக்கர வாகனங்கள் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள அதுல் ஆட்டோ நிறுவனம், இந்த நிதியாண்டில், விற்பனையில் 60 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, அதுல் ஆட்டோ நிறுவன இயக்குனர் விஜய் கேடியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த நிதியாண்டில், தங்கள் நிறுவனம் 50 சதவீத விற்பனை வளர்ச்சியை எதிர்பார்த்ததாகவும், ஆனால் விற்பனை 60 சதவீதத்தை அடைந்துள்ளது தங்களுக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. தங்கள் நிறுவன தயாரிப்புகளுக்கு மக்களுக்கு உள்ள நன்மதிப்பை இதுகாட்டுவதாக உள்ளது. நாட்டின் அனைத்துப்பகுதிகளிலும், தங்கள் நிறுவன தயாரிப்புகளின் தேவை அதிகமாக இருப்பதால், கிராமப்புறம் மற்றும் குக்கிராமங்களிலும் சேவை விரிவுபடுத்த உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|