பதிவு செய்த நாள்
25 ஏப்2011
14:14
புதுடில்லி : மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம், தங்கள் தயாரிப்பான லோகன் காரின் பெயரை 'வெரிட்டோ' என்று மாற்றியுள்ளது. இதுதொடர்பாக, மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தங்கள் நிறுவனம், ரெனால்ட் நிறுவன ஒத்துழைப்புடன் வாகன வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தது. ரெனால்ட் நிறுவனத்துடனான உறவு முறிவடைந்து 1 ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அப்போது அறிமுகம் செய்யப்பட்ட லோகன் காரின் பெயரை, தற்போது வெரிட்டோ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மற்ற படி எந்த மாற்றமும் இதில் செய்யப்படவில்லை. இனி உற்பத்தி செய்யப்பட உள்ள வெரிட்டோ கார்களில், மகிந்திரா நிறுவனத்தின் பேட்ச் மற்றும் எம்பலம் இடம்பெற்றிருக்கும் என்றும், பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களில் விற்பனைக்கு உள்ள இந்த கார்களின் விலை ரூ. 4.67 லட்சமாகவும் மற்றும் ரூ. 6.47 லட்சமாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|