பதிவு செய்த நாள்
25 ஏப்2011
15:00
புதுடில்லி : ரிசர்ச் இன் மோசன் (ரிம்) நிறுவனம், இந்தியாவில் வாழும் சிடிஎம்ஏ வாடிக்கையாளர்களுக்காக, 'ஸ்டைல்' என்ற பெயரில் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, ரிம் இந்தியா நிறுவன நிர்வாக இயக்குனர் பிரென்னி பாவா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தங்கள் நிறுவனம், ஏற்கனவே, டாடா டெலிசர்வீசஸ் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனத்துடன் இணைந்து பிளாக்பெர்ரி போனை அறிமுகப்படுத்தியது. தற்போது அறிமுகப்படுத்தியுள்ள ஸ்மார்ட்போன், ஃபிலிப் வகையிலானது. ஃபிலிப் மாடலில், குவெர்டி கீபோர்டுடன் அமைந்துள்ள இந்தபோன், 2 இஞ்ச் வெளிப்புற திரை மற்றும் 2.7 இஞ்ச் உட்திரை கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிளாஷ் வசதியுடன் கூடிய 5 மெகாபிக்சல் கேமராவுடனான இந்த போன், வீடியோ ரெக்கார்டிங், ஜிபிஎஸ், ஜியோ டாக்கிங், வை பை அக்சஸ், 32 ஜிபி வரையிலான மெமரி, நேவிகேசனுக்கு உதவும் வகையிலான ஆப்டிகல் டிராக்பேட் உள்ளிட்ட அம்சங்களை கொண்டதாக இந்த ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|