பதிவு செய்த நாள்
29 ஏப்2011
13:55
நியூயார்க் : சாப்ட்வேர் தயாரிப்பு மற்றும் வர்த்தகத்தில் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள மைக்ரோசாப்ட் கார்ப்பரேசன் நிறுவனம், ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் விற்பனை அதிகரித்து நிகர வருமானம் 31 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மைக்ரோசாப்ட் கார்ப்பரேசன் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2011ம் ஆண்டின், ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில், நிறுவன வருமானம் 31 சதவீதம் அதிகரித்து 5.23 பில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவாகி உள்ளது. மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த இந்த காலகட்டத்தில், நிறுவன வருமானம் 13 சதவீதம் அதிகரித்து 16.43 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில், கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரித்திருப்பது இதன்மூலம் புலனாவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|