அட்ஷய திரிதியை : நகை விற்பனை 40% அதிகரிப்புஅட்ஷய திரிதியை : நகை விற்பனை 40% அதிகரிப்பு ... ஈரோட்டில் சாயப்பட்டறைகள் இடிப்பு தினமும் ஒரு கோடி மீட்டர் துணி வடமாநிலங்களுக்கு செல்கிறது ஈரோட்டில் சாயப்பட்டறைகள் இடிப்பு தினமும் ஒரு கோடி மீட்டர் துணி ... ...
குறைந்த விலையில் அசத்தலான பழைய இருசக்கர வாகனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2011
00:06

வீ. அரிகரசுதன் சென்னையில், சேப்பாக்கம் என்றதும் நம் நினைவுக்கு வருவது, உலக புகழ்பெற்ற எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியம், பெரிய மசூதி, அரசினர் விடுதி, கணக்கிலடங்காத மேன்சன்கள் ஆகியவை தான். இந்த பட்டியலில், பெல்ஸ் சாலையையும் சேர்த்துக் கொள்ளலாம்.அந்த அளவிற்கு, இங்கு பழைய இரு சக்கர வாகனங்கள் விற்பனை, அமோகமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் பழைய பைக்குகளின் மொத்த விற்பனை மையமாக, பெல்ஸ் சாலை விளங்குகிறது. இங்கு, 1969ம் ஆண்டு, ஆசாத்கான் லோதி என்பவர் முதன்முதலாக பழைய இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்யத் தொடங்கினார். 42 ஆண்டுகள் உருண்டோடி விட்ட நிலையில், தற்போது இந்த சாலையில், 65க்கும் மேற்பட்ட கடைகளில், பழைய மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்கள் வியாபாரம், சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. இங்குள்ள வியாபாரிகளில் பெரும்பாலோர், ஒரு காலத்தில் அங்குள்ள கடைகளில் வேலை செய்து, பின்னர் அப்பகுதியிலேயே புதிய கடைக்கு சொந்தக்காரர்களாக முன்னேறியவர்கள். இங்கு, ஹீரோ ஹோண்டா, பஜாஜ், டி.வி.எஸ்., ஹோண்டா, யமஹா, ராயல் என்பீல்டு, சுசூகி உள்ளிட்ட எந்த ஒரு நிறுவனத்தின், பழைய வாகனங்களையும் வாங்க முடியும். இதுதவிர, சந்தையில் அறிமுகமாகும் புதிய, இரு சக்கர வாகனங்களைக் கூட, ஓரிரு மாதத்திற்குப் பிறகு இப்பகுதியில் வாங்கலாம்.இரு சக்கர வாகனங்கள், குறைந்த விலையில் கிடைப்பதால், இங்குள்ள கடைகளில் எப்பொழுதும் கூட்டம் மொய்த்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், கடலூர், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வர்த்தகர்கள், இங்கு வந்து குறைந்த விலைக்கு வாகனங்களை வாங்கி சென்று, தங்கள் பகுதிகளில் கூடுதல் லாபத்திற்கு விற்பனை செய்து வருகின்றனர். பைக் பிரியர்கள், தங்களுக்கு பிடித்த வாகனங்களை வாங்கிச் செல்வதற்காகவும் பெல்ஸ் சாலைக்கு வருகின்றனர். இதுதவிர, கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும், ஏராளமானோர் இங்கு வந்து, வட்டார போக்குவரத்து அலுவலரின், தடையில்லா சான்றிதழுடன், வாகனங்களை வாங்கிச் செல்கின்றனர். கேரளாவில், பழைய ஆக்டிவா மற்றும் புல்லட் வாகனங்களுக்கு, அதிக கிராக்கி உள்ளது. அதனால், அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வகை வாகனங்களை அதிகளவில் வாங்குகின்றனர்.இதனால், இங்கு பழைய வாகன வியாபாரம், புது வாகனங்களின் விற்பனைக்கு நிகராக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, இத்துறையில், வர்த்தக வாய்ப்பும் அதிகரித்துள்ளது.பழைய வாகனங்களை பராமரித்தல், பழுது பார்த்தல், பெயின்டிங் செய்தல், ஆர்.டி.ஓ., அலுவலகம் சார்ந்த பணிகள் உள்ளிட்டவற்றின் மூலம், 300க்கும் மேற்பட்டோர், நேரடி வேலைவாய்ப்பைப் பெற்று வருகின்றனர். இதுதவிர, 1,000க்கு மேற்பட்டோருக்கும் பெல்ஸ் சாலை மறைமுக வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. மே மாதம் உள்ளிட்ட விடுமுறை காலங்களில், மக்கள் ஆர்வத்துடன் வாகனம் ஓட்ட கற்றுக் கொள்வர். இதனால், இம்மாதங்களில், பழைய வாகனங்களின் விற்பனை மும்முரமாக இருக்கும். கல்லூரிகள் திறக்கும் காலத்தில் மாணவ, மாணவியர் அதிகளவில் பழைய வாகனங்கள் வாங்கிச் செல்கின்றனர். மார்கழி மற்றும் ஆடி மாதங்களைத் தவிர, ஆண்டு முழுவதும் விற்பனை நன்றாக இருக்கும். குறிப்பாக, தீபாவளி காலத்தில் புதிய கணக்கை துவங்குவதற்காக, இங்கு அதிகளவில் வாகனங்கள் வாங்கப்படுகின்றன. கூரியர் நிறுவனத்தில் பணியாற்றுவோர், தண்ணீர் சப்ளை செய்பவர்கள், பேப்பர் மற்றும் பால் வினியோகத்தில் உள்ளவர்கள், புதிய வண்டியைக் காட்டிலும், பயன்படுத்திய வாகனத்தைத் தான் அதிகளவில் வாங்குவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, பெல்ஸ் சாலை பழைய இரு சக்கர வாகன விற்பனையாளர்கள் சங்கத்தின் செயலர் தாவூத் கான் லோதி கூறியதாவது: பழைய வாகனங்களின், ஆர்.சி.புக், இன்சூரன்ஸ், நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்றிருந்தால் அதற்குண்டான சான்றிதழ், ஆர்.சி., புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சேஸ் மற்றும் இன்ஜின் எண்ணும், வண்டியில் உள்ள சேஸ் மற்றும் இன்ஜின் எண்ணும் சரியாக உள்ளதா என பரிசோதித்த பிறகே, விற்பனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். ஆர்.சி., புக் இல்லாத வாகனங்களை எந்த காரணம் கொண்டும் வாங்குவதில்லை. திருட்டு வாகனங்களை தடுப்பதற்கு, இதுபோன்ற நடைமுறைகளை பின்பற்றுகிறோம். இவ்வாறு தாவூத் கான் லோதி கூறினார். வாகனங்களை விற்போர், பெல்ஸ் சாலையில் உள்ள கடைகளில் அவற்றை ஒப்படைத்து விடுகின்றனர். அந்த வாகனங்களை வாங்க வருவோரிடமிருந்தும், வாகன உரிமையாளர்களிடமிருந்தும் குறிப்பிட்ட தொகையை, தரகுக் கட்டணமாக வர்த்தகர்கள் பெற்றுக் கொள்கின்றனர். இந்த தரகுக் கட்டணத்தை நம்பியே, பெல்ஸ் சாலையில் உள்ள பெரும்பாலான வியாபாரிகள் உள்ளனர். பழமைக்கு என்றும் மதிப்புண்டு. ஆங்கிலத்தில் பிரபலமான, 'ஓல்டு இஸ் கோல்டு' என்ற வாசகம், பழைய இருசக்கர வாகனங்களுக்கு அதிகம் பொருந்தும். மிகப் பழமையான வில்லியர்ஸ் புல்லட், எஸ்டி, ராஜ்தூத், ஜாவா, லேம்ரேட்டா, வெஸ்பா, பென்டா பிளஸ், வி.எஸ்.ஏ., போன்ற மோட்டார் சைக்கிள்களை வாங்க எங்கும் போக வேண்டாம்.... பெல்ஸ் சாலைக்கு வந்தால் போதும்... விரும்பிய வாகனத்தை ஓட்டிச் செல்லலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, 47 வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவங்குகிறது.இன்றும் ... மேலும்
business news
புதுடில்லி–எரிபொருள் விலை அதிகரிப்பால், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளன.உலகின் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் வருமான சமத்துவமின்மை, கடந்த 2016 – 17ம் நிதியாண்டு முதல் சரிந்து வருவதாக, எஸ்.பி.ஐ., பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் தொடர்ச்சியான பணவீக்கம், அனைத்து வகைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என, டாடா குழுமத்தின் ... மேலும்
business news
தங்கம் 1 கி: 4,755.008 கி: 38,040.00வெள்ளி1 கிராம்: 65.7701 கிலோ: ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)