பின்லேடன் வதம் : கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் பலன்பின்லேடன் வதம் : கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் பலன் ... அன்னிய நிதி நிறுவனங்களின் நிகர பங்கு முதலீடு ரூ.7,213 கோடி அன்னிய நிதி நிறுவனங்களின் நிகர பங்கு முதலீடு ரூ.7,213 கோடி ...
முக்கிய ஆறு துறைகளின் உற்பத்தி 7.4 சதவீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2011
00:10

புதுடில்லி: நாட்டின் அடிப்படை கட்டமைப்பு துறைகளில், முக்கிய ஆறு பிரிவுகளின் உற்பத்தி வளர்ச்சி, சென்ற மார்ச் மாதம் 7.4 சதவீதம் உயர்ந்துள்ளது. இது, கடந்த 2010ம் ஆண்டு, மார்ச் மாதத்தில் 6.8 சதவீதம் என்ற அளவில் இருந்தது.நாட்டின் தொழில் துறை உற்பத்தி குறியீட்டு எண் கணக்கிட உதவும், முக்கிய துறைகளுள், அடிப்படை கட்டமைப்பு துறைகளின் பங்களிப்பு, 26.7 சதவீதமாக உள்ளது. சென்ற 2010-11ம் நிதியாண்டில், அடிப்படை கட்டமைப்பு துறைகளின் வளர்ச்சி, 5.9 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இது, இதற்கு முந்தைய 2009-10ம் நிதியாண்டில், 5.5 சதவீதம் என்ற அளவில் இருந்தது.தற்காலிக புள்ளி விவரத்தின்படி, சென்ற மார்ச் மாதத்தில், கச்சா எண்ணெய் உற்பத்தி 12.1 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்திருந்தது. அதே சமயம், சென்ற ஆண்டின் இதே மாதத்தில், இப்பிரிவின் வளர்ச்சி 3.5 சதவீதம் என்ற அளவில் இருந்தது.பெட்ரோலிய சுத்திகரிப்பு துறையின் வளர்ச்சி, 8.5 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து காணப்பட்டது. இது, சென்ற ஆண்டின் இதே மாதத்தில், 1.1 என்ற அளவில் மிகவும் குறைவாக இருந்தது. இந்நிலையில், சென்ற மார்ச் மாதத்தில் மின்சாரம், சிமென்ட் போன்றவற்றின் உற்பத்தி வளர்ச்சி முறையே, 7.6 சதவீதம் மற்றும் 6.5 சதவீதம் என்ற அளவில் குறைந்திருந்தது. அதே சமயம் சென்ற ஆண்டின் இதே மாதத்தில், இத்துறைகளின் வளர்ச்சி முறையே, 7.9 சதவீதம் மற்றும் 7.8 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து காணப்பட்டது.சென்ற மார்ச் மாதத்தில், விற்பனைக்கான உருக்கு பொருள்கள் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 7.7 சதவீதம் என்ற அளவிலிருந்து, 9.9 சதவீதம் என்ற அளவில் உயர்ந்திருந்தது. ஆனால், நிலக்கரி உற்பத்தி, சென்ற மார்ச் மாதத்தில், 1.2 சதவீதம் என்ற அளவில் மிகவும் சரிவடைந்திருந்தது. இது, சென்ற ஆண்டின், இதே மாதத்தில், 8 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து காணப்பட்டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)