அன்னிய நிதி நிறுவனங்களின் நிகர பங்கு முதலீடு ரூ.7,213 கோடிஅன்னிய நிதி நிறுவனங்களின் நிகர பங்கு முதலீடு ரூ.7,213 கோடி ... அட்சய திருதியை: தங்கம் விற்பனை 40 சதவீதம் உயரும் அட்சய திருதியை: தங்கம் விற்பனை 40 சதவீதம் உயரும் ...
நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இரு சக்கர வாகனங்கள் விற்பனையில் எழுச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2011
00:12

மும்பை: சென்ற ஏப்ரல் மாதத்தில், நாட்டின் இரு சக்கர வாகனங்கள் விற்பனை சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. அதேசமயம், கார்கள் உள்ளிட்ட வர்த்தக வாகனங்கள் விற்பனை வளர்ச்சி, கடந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது, குறைந்து போயுள்ளது. வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரித்துள்ளதால், கார்கள் உள்ளிட்ட வர்த்தக வாகனங்கள் வாங்குவது குறைந்துள்ளது. இதன் காரணமாகவே, சென்ற ஆண்டின் ஏப்ரல் மாதத்தை விட, நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில், இந்த வாகனங்களின் விற்பனை வளர்ச்சி, ஒற்றை இலக்கத்திற்கு வந்துள்ளது என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர் கருத்து வெளியிட்டார். இருப்பினும், இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை வளர்ச்சி, தொடர்ந்து நல்ல அளவில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும் நிலையில், அது, வாகனத்துறையில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என, அந்த ஆய்வாளர் மேலும் தெரிவித்தார். இந்தியா யமஹா மோட்டார்: இந்நிறுவனம், கடந்த ஏப்ரலில், 34 ஆயிரத்து, 476 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, இதற்கும் முந்தைய ஆண்டு ஏப்ரலில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 38 சதவீதம் (24 ஆயிரத்து, 968 வாகனங்கள்) அதிகம். இதே மாதத்தில், உள்நாட்டு விற்பனை, 53 சதவீதம் வளர்ச்சி கண்டு, 16 ஆயிரத்து, 869 என்ற எண்ணிக்கையிலிருந்து, 25 ஆயிரத்து, 817 ஆக உயர்ந்துள்ளது. சுசுகி: இந்நிறுவனம், இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், கடந்த மார்ச் மாதத்தில், 29 ஆயிரத்து 369 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, இதற்கும் முந்தைய நிதியாண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 41 சதவீதம் (20 ஆயிரத்து 758 வாகனங்கள்) அதிகம். பஜாஜ் ஆட்டோ: இந்நிறுவனம், சென்ற ஏப்ரல் மாதத்தில், 3 லட்சத்து 22 ஆயிரத்து 235 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 2 லட்சத்து 76 ஆயிரத்து 95 வாகனங்கள் என்ற எண்ணிக்கையில் இருந்தது. ஆக, நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை, சென்ற ஏப்ரல் மாதத்தில் 16.71 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இந்நிறுவனத்தின், மோட்டார் சைக்கிள் ஏற்றுமதி மிக அதிகளவாக, 1 லட்சத்து 58 ஆயிரத்து 422 வாகனங்களாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 39.08 சதவீதம் ( 1 லட்சத்து 13 ஆயிரத்து 911 வாகனங்கள் ) அதிகம். இந்நிறுவனம், மூன்று சக்கர வாகனங்கள் பிரிவில், முன் எப்போதும் இல்லாத வகையில், சென்ற ஏப்ரல் மாதத்தில், 45 ஆயிரத்து 74 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், 20.68 சதவீதம் ( 37 ஆயிரத்து 350 வாகனங்கள்) உயர்வாகும். நிறுவனத்தின் ஒட்டு மொத்த வாகனங்கள் விற்பனை, இதே மாதங்களில், 17.17 சதவீதம் அதிகரித்து, 3 லட்சத்து 13 ஆயிரத்து 472 என்ற எண்ணிக்கையிலிருந்து, 3 லட்சத்து 67 ஆயிரத்து 309 ஆக அதிகரித்துள்ளது. மாருதி சு”கி: இந்நிறுவனம், சென்ற ஏப்ரல் மாதத்தில் 97 ஆயிரத்து 155 கார்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த 2010, ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 4.40 சதவீதம் (93 ஆயிரத்து 58 கார்கள்) அதிகம். அதே சமயம் சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத் தில் இந்நிறு வனத்தின் விற்பனை வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதே மாதத்தில், இந்நிறுவனம் உள்நாட்டில், 87 ஆயிரத்து 144 கார்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 8.88 சதவீதம் (80 ஆயிரத்து 34 கார்கள்) அதிகம். இம்மாதத்தில், இந்நிறுவனத்தின் கார்கள் ஏற்றுமதி 23.11 சதவீதம் சரிவடைந்து, 13 ஆயிரத்து 24 என்ற எண்ணிக்கையிலிருந்து, 10 ஆயிரத்து 11 ஆக குறைந்துள்ளது. கணக்கீடு செய்வதற்கு எடுத்து கொள்ளப்பட்ட மாதத்தில், இந்நிறுவனத்தின் 'எம்-800' கார்கள் விற்பனை 11.96 சதவீதம் வளர்ச்சியடைந்து, 2,258 என்ற எண்ணிக்கையிலிருந்து, 2,528 ஆக உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் ஆல்டோ, வேகன்-ஆர், எஸ்டிலோ, ஸ்விப்ட், ஏ-ஸ்டார் மற்றும் ரிட்ஸ் ஆகிய கார்கள் விற்பனை 1.82 சதவீதம் உயர்ந்து, 56 ஆயிரத்து 416 என்ற எண்ணிக்கையிலிருந்து, 57 ஆயிரத்து 443 ஆக உயர்ந்துள்ளது. மேலும், எஸ்.எக்ஸ்-4 மற்றும் டிசையர் ஆகிய கார்கள் விற்பனை 39.07 சதவீதம் உயர்ந்து 9,994 என்ற எண்ணிக்கையிலிருந்து, 13 ஆயிரத்து 899 ஆக அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் ஒட்டுமொத்த பயணிகள் கார்கள் விற்பனை, 7.63 சதவீதம் உயர்ந்து, 68 ஆயிரத்து 668 என்ற எண்ணிக்கையிலிருந்து, 73 ஆயிரத்து 905 ஆக வளர்ச்சியடைந்துள்ளது என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹுண்டாய்: இந்நிறுவனம், கடந்த ஏப்ரலில், 52 ஆயிரத்து 58 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, இதற்கும் முந்தைய நிதியாண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 0.1 சதவீதம் (52 ஆயிரத்து 20 வாகனங்கள்) அதிகம். இந்நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை, 11 சதவீதம் வளர்ச்சி கண்டு, 28 ஆயிரத்து 501 என்ற எண்ணிக்கையிலிருந்து, 31 ஆயிரத்து 636 ஆக அதிகரித்துள்ளது. இதே மாதங்களில், இந்நிறுவனத்தின் ஏற்றுமதி, 13.2 சதவீதம் குறைந்து, அதாவது, 23 ஆயிரத்து 519 என்ற எண்ணிக்கையிலிருந்து, 20 ஆயிரத்து 422 ஆக குறைந்துள்ளது. டாட்டா மோட்டார்ஸ்: இந்நிறுவனம், கடந்த ஏப்ரலில், 64 ஆயிரத்து, 383 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 13 சதவீதம் (57 ஆயிரத்து, 199 வாகனங்கள்) அதிகம். முதல் முறையாக இந்நிறுவனத்தின், குறைந்த விலை கொண்ட நானோ கார் விற்பனை, 10 ஆயிரத்து 12 ஆக உயர்ந்துள்ளது. இது, இதற்கும் முந்தைய ஆண்டின் இதே மாத விற்பனையை விட, 184 சதவீதம் அதிகம். பயணிகள் வாகனங்கள் விற்பனை, 1.24 சதவீதம் வளர்ச்சி கண்டு, 23 ஆயிரத்து, 99 என்ற எண்ணிக்கையிலிருந்து, 23 ஆயிரத்து, 387 வாகனங்களாக உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரலில், டாட்டா இண்டிகா கார்கள் விற்பனை, சென்ற ஆண்டின் இதே மாதத்தை விட, 53 சதவீதம் குறைந்து, 4,250 கார்களாக உள்ளது. இண்டிகோ கார் விற்பனை, 5,282 ஆக உள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே மாத விற்பனையை விட, 27 சதவீதம் குறைவு.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)