பதிவு செய்த நாள்
05 மே2011
15:17
மாருதி சுசூகி நிறுவனத்துக்கு, ஹரியானா மாநிலத்தில் உள்ள குர்கானில் தொழிற்சாலை உள்ளது. இந்த இடம், டில்லியில் இருந்து 30 கி.மீ., தொலைவில் தான் உள்ளது. இந்த தொழிற்சாலையில் ஆண்டுக்கு 9.5 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. மாருதி சுசூகியின் ஸ்விஃப்ட், மாருதி 800, ஓம்னி வேன், வேகன் ஆர், ரிட்ஸ், ஆல்டோ, எக்கோ மற்றும் ஜிப்சி ஆகிய கார்கள் இங்கு தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த சூழ்நிலையில், ஹரியானா மாநிலம் குர்கான் மாவட்டத்தில் உள்ள மானேஸர் என்ற இடத்தில் புதிய தொழிற்சாலைகளை மாருதி சுசூகி நிறுவனம் அமைத்து வருகிறது. இங்கு ஆண்டுக்கு 5 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யும் அளவுக்கு திறன்படைத்த இரண்டு தொழிற்சாலைகள் அமைக்கப்படுகின்றன. குர்கான் தொழிற்சாலையில் கடும் இட நெருக்கடி காணப்படுகிறது. மேலும், அங்குள் தொழிற்சாலையையும் மேம்படுத்த வேண்டியுள்ளது. எனவே, குர்கான் தொழிற்சாலையில் இருந்து 3 லட்சம் கார்கள் உற்பத்தியை, மானேஸர் தொழிற்சாலைக்கு இடம் மாற்றம் செய்ய, மாருதி சுசூகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|