பதிவு செய்த நாள்
07 மே2011
09:45
புதுடில்லி : ஆடம்பர கார்கள் தயாரிப்பில் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள ஆடி நிறுவனத்தின் இந்திய அங்கமான ஆடி இந்தியா நிறுவனம், ஏப்ரல் மாதத்தில் நிறுவன கார்களின் விற்பனை 98 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஆடி இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில், தங்கள் நிறுவனம் 375 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில், 189 கார்கள் மட்டுமே விற்பனை ஆகியிருந்ததாகவும், சதவீதத்தின் அடிப்படையில், இது 98 சதவீதம் அதிகம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலகட்டத்தில் 1,986 கார்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும் போது (967) இரண்டு மடங்கு அதிகம் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|