இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்புஇந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு ... தங்கம் விலை சற்று அதிகரிப்பு தங்கம் விலை சற்று அதிகரிப்பு ...
12 வகையான 'பீர்' : கோடை வெயிலுக்கு டாஸ்மாக் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2011
10:51

சேலம்: அனல் கக்கும் அக்னியின் துவக்கத்தையடுத்து, 'டாஸ்மாக்' மதுக்கடைகளில் பீர் விற்பனை குபீரென, உயர்ந்துள்ளது. 'குடி'மகன்களின் தாகத்தை தீர்க்கும் வகையிலும், குஷிப்படுத்தவும் போதை அதிகரிப்பு செய்யப்பட்ட, 12 வகையான புதிய பீர்களை, 'டாஸ்மாக்' நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அக்னி நட்சத்திரத்தின் துவக்கத்துக்கு முன்னரே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரமும் துவங்கியதால், மண்டையை பிளக்கும் அளவுக்கு வெயிலின் உக்கிரம் அதிகரித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை கொட்டித் தீர்த்த நிலையிலும் சென்னை, திருத்தணி உள்ளிட்ட சில நகரங்களில் வெயிலின் தாக்கம், 103 முதல், 111 டிகிரி வரை என கொதிக்கிறது. இந்த உக்கிரத்தில் இருந்து தங்களை தணித்துக் கொள்ள, 'குடி'மகன்கள் அதிக அளவில், 'ஜில்' பீர்களை வாங்கி, தாகத்தை தணித்துக் கொள்கின்றனர். பகலில் வெயிலின் தாக்கமும், அதைத் தொடர்ந்து மாலையில் அனல் காற்றும், இரவில் புழுக்கமும் அதிகரித்துள்ளதால், 'குடி' மகன்கள் பிராந்தி, விஸ்கி, ரம் உள்ளிட்ட ஐ.எம்.எல்.எப்., மது வகைகளை ஓரம் கட்டி வருகின்றனர். அதற்கு மாற்றாக, 'ஜில்' என்று பீர் வாங்கி, ஜிவ்வென குடிப்பதில் விருப்பம் காட்டுகின்றனர். பீரில் மிகுதியான போதைக்காக அதை ஒயினுடன் கலந்து கொள்கின்றனர். அதனால், 'டாஸ்மாக்' கடைகளில், பீர், ஒயின் விற்பனை ஜிவ்வென உயர்ந்துள்ளது. இதில், கூலிங் பீருக்காக கூடுதலான விலை கொடுக்கவும், 'குடி'மகன்கள் தயக்கம் காட்டுவது இல்லை. தமிழகத்தில் பீர் விற்பனை 50 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், விற்பனைக்கு ஏற்ப பீர் சப்ளை அதிகரிக்கப்படவில்லை. வழக்கமான கம்பெனிகள் போதுமான அளவு பீர் சப்ளை செய்ய தயக்கம் காட்டின. இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், 'டாஸ்மாக்' நிறுவனம் தற்போது 12 வகையான புதிய பீர்களை அறிமுகம் செய்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தில் செயல்படும் ஜெயமுருகன் பிரிவெரீஸ் (பி) லிமிடெட் சார்பில், 12 வகையான பீரை விற்பனைக்காக அறிமுகம் செய்துள்ளது. இதில், எஸ்.என்.ஜெ., 10,000 சூப்பர் ஸ்ட்ராங் பீர், 75 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த ரக பீர் தற்போது ஈரோடு, சென்னை, சேலம் மாவட்ட, 'டாஸ்மாக்' மது கடைகளில், மே 2ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஹை வோல்டேஜ் சூப்பர் ஸ்ட்ராங் பீர், 75 ரூபாய் விலையில் இன்று முதல் கடைகளில் விற்பனைக்கு வருகிறது. வழக்கமான பீர்களில், 6 சதவீதம் மட்டுமே ஆல்கஹால் இருக்கும். ஆனால், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய பீர்களில், 2 சதவீதம் கூடுதலாக, 8 சதவீதம் வரை ஆல்கஹால் உள்ளது. விரைவில், 666 மெகா ஸ்ட்ராங் பீர், 666 ஒரிஜினல் லெகர் பீர் ஆகியன 65 ரூபாயிலும், ஆப் பீர் 40 ரூபாய்க்கும் விற்பனைக்கு வருகிறது. ஹார்ட் ராக் செலக்ட் ஸ்ட்ராங் பீர், சிங்கம் ஒரிஜினல் எக்ஸ்ட்ரா ஸ்ட்ராங் பீர், எஸ்.என்.ஜெ., 10,000 பைன் லெகர் பீர், எஸ்.என்.ஜெ., 10,000 சூப்பர் ஸ்ட்ராங் பீர், 70 ரூபாய்க்கு விற்பனைக்கு வருகிறது. இதில், ஆப் பீர் 40 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது. ஹை வோல்டேஜ் சூப்பர் ஸ்ட்ராங் பீர் 70 ரூபாய், எஸ்.என்.ஜெ., அல்ட்ரா பிரிமீயம் கிளாசிக் பீர் 80 ரூபாய், ஆப் பீர் 45 ரூபாய், பிரிட்டீஷ் எம்பயர் அல்ட்ரா பிரிமீயம் எக்ஸ்குளூசிவ் பீர் 90 ரூபாய், ஆப் பீர் 50 ரூபாய், டென்னென்ஸ் ஒரிஜினல் ஸ்ட்ராங் பீர் 75 ரூபாய், ஆப் பீர் 45 ரூபாய், பிளாக் ஈகிள் எக்ஸ்ட்ரா ஸ்ட்ராங் பீர் 75 ரூபாய் விலைகளில் விரைவில் விற்பனைக்கு வருகிறது. 'டாஸ்மாக்' கடைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளஇந்த புதிய ரக பீர்கள், 'குடி'மகன்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)