தங்கம் பவுனுக்கு ரூ. 56 அதிகரிப்புதங்கம் பவுனுக்கு ரூ. 56 அதிகரிப்பு ... அனைத்து மாடல்களிலும் சி.என்.ஜி., வசதி : மாருதி சுசூகி திட்டம் அனைத்து மாடல்களிலும் சி.என்.ஜி., வசதி : மாருதி சுசூகி திட்டம் ...
லிட்டருக்கு 40 கி.மீ., மைலேஜ் : மிரட்டும் நானோ டீஸல் கார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2011
12:21

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், உலகின் மிக விலை குறைந்த கார் எனக் கூறி, நானோ காரை அறிமுகப்படுத்தியது. முன்பதிவு செய்தவர்களுக்கு, டெலிவரி செய்த பிறகு, நானோ கார் விற்பனையில் தொய்வு ஏற்பட்டது. பல்வேறு சலுகைகளை அறிவித்த பிறகு, தற்போது நானோ கார் விற்பனை மாதத்துக்கு 10 ஆயிரம் கார்கள் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த சூழ்நிலையில், டீஸலில் இயங்கும் நானோ காரை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த காருக்கு இப்போதே ஏகப்பட்ட வரவேற்பு காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், டீஸலில் இயங்குவது என்பது மட்டுமல், அதிக மைலேஜ் தரும் என்ற நம்பிக்கையும் தான். இந்த சூழ்நிலையில், போஸ்ச் இந்தியா நிறுவனத்தின் மூத்த நிர்வாகி ஒருவர், நானோ டீஸல் கார் குறித்த புதிய தகவல்களை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,' டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பெட்ரோலில் இயங்கும் நானோ கார் உற்பத்தியில் எங்கள் பங்களிப்பும் உண்டு. தற்போது டீஸல் காரை உருவாக்குவதிலும் இணைந்து பணியாற்றி வருகிறோம். இந்த காரில் இரண்டு சிலிண்டர், 700 சிசி திறன் கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. டீஸலை அதிகம் செலவழிக்காமல், அதிக சக்தியை வழங்கும் இன்ஜின் இது. இந்த கார் எவ்வளவு மைலேஜ் தரும் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், ஒரு லிட்டர் டீஸலுக்கு 40 கி.மீ., மைலேஜ் தரும் என்ற நம்பிக்கை உள்ளது' என்றார். இது மட்டும் உண்மையாக இருந்தால், நானோ டீஸல் காரில் செல்லும் போது ஒரு கி.மீ., துõரத்துக்கு ஒரு ரூபாய் மட்டுமே செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. பஜாஜ் ஆட்டோ நிறுவனமும், நிஸான் நிறுவனமும் இணைந்து 2012ம் ஆண்டு, சிறிய கார் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளன. அந்த காருக்கு, நானோ டீஸல் கார் கடும் போட்டி அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)