பதிவு செய்த நாள்
14 மே2011
10:32
லண்டன் : சீன தயாரிப்புகளுக்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் மிகுந்த வரவேற்பு உள்ளது மீண்டும் ஒருமுறை புலனாகி உள்ளது. பிராண்ட் வேல்யூவை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச நாடுகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், முதல் 10 இடங்களில் இந்திய நிறுவனங்கள் எதுவும் இடம்பெறவில்லை. சீனா மொபைல், 9வது இடத்தைப் பிடித்துள்ளது. பிராண்ட் வேலயூவை முக்கிய காரணியாகக் கொண்டு பிராண்ட்ஜ் டாப் 100 நிறுவனங்களின் பட்டியல் திங்கட்கிழமையன்று வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த இந்த கருத்துக்கணிப்பை நடத்திய நிறுவனமான மில்வார்ட் பிரவுன் ஆப்டிமர் நிறுவன நிர்வாக இயக்குனர் நிக் கூப்பர் கூறியதாவது. முதல் 50 இடங்களில், சீனாவின் 4 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. 69 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பிராண்ட் வேல்யூ மதிப்பிலான சீனா மொபைல் நிறுவனம் 9வது இடத்திலும், ஐசிபிசி 11வது இடத்திலும், பாய்டு 29வது இடத்திலும், பேங்க் ஆப் சீனா 37 இடத்தையும் பிடித்துள்ளது. இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி, இந்த பட்டியலில் 53வது இடத்தைப் பிடித்துள்ளது. டாடா மற்றும் ரிலையன்ஸ் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் இந்த பட்டியலில் இடம்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இணையதள ஜாம்பவானான கூகுளை பின்னுக்குத் தள்ளி ஆப்பிள் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. 153 பில்லியன்$ பிராண்ட் வேல்யூவுடன் ஆப்பிள் நிறுவனம் முதலிடத்திலும், 111 பில்லியன்$ பிராண்ட் வேல்யூவுடன் கூகுள் இரண்டாமிடத்திலும், 100 பில்லியன்$ பிராண்ட் வேல்யூவுடன் ஐபிஎம் மூன்றாம் இடத்திலும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|