பதிவு செய்த நாள்
14 மே2011
11:01
கோழிக்கோடு : மெத்தைகள் தயாரிப்பு மற்றும் வர்த்தகத்தில் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள ஸ்பிரிங் ஏர் நிறுவனம், கேரளாவில், பாஃப்தே - தி ஸ்லீப் ஸ்டோர் என்ற பெயரில் எக்ஸ்குளூசிவ் ஷோரூமை திறந்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த பாஃப்தே தி ஸ்லீப் ஸ்டோர் நிறுவனர் அன்வர் கூறியதாவது, மெத்தைகள் தயாரிப்பு மற்றும் வர்த்தகத்தில், தங்கள் நிறுவனம் 80 ஆண்டுகால அனுபவம் வாய்ந்தது. முதன்முதலில் அமெரிக்காவில் துவங்கப்பட்ட தங்கள் நிறுவனம், தற்போது 36 நாடுகளில் வர்த்தகம் செய்து வருகிறது. தங்கள் நிறுவன தயாரிப்புகள், இடுப்பு, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படம் வலியைப் போக்க வல்லது என்றும், சர்வதேச அளவில் முன்னணி ஹோட்டல்களான மாரியாட், ஃபோர் சீசன்ஸ், ஷெராட்டன் உள்ளிட்ட ஹோட்டல்களில் தங்கள் நிறுவன தயாரிப்புகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். பாஃப்தே ஷோரூம்கள், ஏற்கனவே, சென்னை மற்றும் மங்களூரில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|