பதிவு செய்த நாள்
14 மே2011
14:19
புதுடில்லி : 2010 - 11ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில், நிறுவன நிகரலாபம் சரிவடைந்துள்ளதாக லிபெர்டி ஷூ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, லிபெர்டி ஷூ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த இந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில், தங்கள் நிறுவனம், ரூ. 1.37 கோடி நிகரலாபமாக ஈட்டியிருந்தது. கடந்த நிதியாண்டின் இதேகாலகட்டத்தில், நிகரலாபம் ரூ. 2.79 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நிறுவன விற்பனை அதிகரித்திருந்தபோதிலும், நிகரலாபம் சரிவடைந்ததது வருத்தமளிப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில், விற்பனை 15.92 சதவீதம் அதிகரித்து ரூ. 81.68 கோடியாக உள்ளதாகவும், கடந்த நிதியாண்டின் இதேகாலகட்டத்தில், இது ரூ. 70.46 கோடியாக மட்டுமே இருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு வீதத்தில், நிகரலாபம் சரிவடைந்திருந்த போதிலும், ஒட்டுமொத்த நிதியாண்டின் அடிப்படையில் நிறுவன நிகரலாபம் 15.65 சதவீதம் அதிகரித்து ரூ. 9.20 கோடி என்ற அளவிலிருந்து ரூ. 10.64 கோடி என்ற அளவிலும், அதேபோல், விற்பனை 14.03 சதவீதம் அதிகரித்து ரூ. 260.66 கோடி என்ற அளவிலிருந்து ரூ. 297.24 கோடி என்ற அளவிற்கும் அதிகரித்திருப்பதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|