சாயப்பட்டறை மூடலால் ரூ.15 கோடி வர்த்தகம் முடக்கம்:ஜவுளி வியாபாரிகள் கவலை  சாயப்பட்டறை மூடலால் ரூ.15 கோடி வர்த்தகம் முடக்கம்:ஜவுளி வியாபாரிகள் கவலை ... செயற்கை ரப்பர் பயன்பாடு 8 சதவீதம் வளர்ச்சி செயற்கை ரப்பர் பயன்பாடு 8 சதவீதம் வளர்ச்சி ...
கிளாஸ் இந்தியா நிறுவனம்ரூ.18 கோடியில் கிடங்கு வசதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2011
01:49

சென்னை:ஐரோப்பாவைச் சேர்ந்த, கிளாஸ் குழுமத்தின் ஓர் அங்கமான கிளாஸ் இந்தியா நிறுவனம், 'டெர்ரா டிராக்' என்ற ஒருங்கிணைந்த அறுவடை இயந்திரங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், நாட்டின் தென் பகுதியில், அதன் வர்த்தகத்தை அதிகரிக்கும் வகையில், 18 கோடி ரூபாய் மதிப்பில்,பெங்களூரில் அறுவடை இயந்திரங்களை பாதுகாத்து வைக்கும் வகையில், கிடங்கு வசதியை அமைக்க உள்ளது.இதுகுறித்து கிளாஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பிரதீப் கே. மாலிக் கூறியதாவது:டில்லியில் உள்ள பரிதாபாத்தில், நிறுவனத்தின் முதல் அறுவடை தயாரிப்பு தொழிற் சாலை, 1991ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதையடுத்து, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மற்றொரு தொழிற்சாலை, 2008ம் ஆண்டு பஞ்சாபில், ரோப்பர் என்ற இடத்தில் 100 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப் பட்டது. நிறுவனம், இந்தியாவில், கிராப் டைகர் 60, கிராப் டைகர் 30 வீல், கிராப் டைகர் 30 டெர்ரா டிராக் ஆகிய மூன்று வகை இயந்திரங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இதுவரையில், 5,000 அறுவடை இயந்திரங்களை விற்பனை செய்துள்ளது.கிராப் டைகர் 60 இயந்திரத்தில், 125 குதிரை திறன் கொண்ட டர்போ இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. கிராப் டைகர் 30 வீல் இயந்திரம், ஒன்பது அடி நீளத்திற்கு வெட்டு கத்தி பொருந்திய ஒருங்கிணைந்த அறுவடை இயந்திரமாகும்.இதில், 60 குதிரை திறன் வாய்ந்த இன்ஜின் பொருத் தப்பட்டுள்ளது. கிராப் டைகர் 30 டெர்ரா டிராக் அறுவடை இயந்திரம், நவீன தொழில் நுட்பத்தில் வடிவ மைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்களின் விலை 23.50 லட்சம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இவ்வாறு மாலிக் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
business news
புதுடில்லி : கடந்த ஆண்டில், கொரோனா காலத்தை விட, ஆண்களுக்கான ஆடம்பர பிராண்டு பொருட்கள் விற்பனை அதிகரித்து ... மேலும்
business news
மும்பை : ‘யூட்டிலிட்டி வெகிக்கிள்’ எனும், பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என, ‘பிட்ச் ... மேலும்
business news
புதுடில்லி : மூன்று ஆண்டுகளுக்கு பின், மீண்டும் வானில் பறக்க உள்ளன ‘ஜெட் ஏர்வேஸ்’ விமானங்கள். ஜெட் ஏர்வேஸ் ... மேலும்
business news
உலகலாவிய தொழில்நுட்ப பிராண்டான ஒன் பிளஸ், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் மிகவும் அணுகக்கூடிய 5ஜி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)