பதிவு செய்த நாள்
21 மே2011
13:45
பாஸ்டன் : உலகின் மிகப்பெரிய மற்றும் முன்னணி வர்த்தக நிறுவனமான வால் மார்ட் நிறுவனம், சோஷியல் மீடியா இணையதளமான கோஸ்மிக்ஸை தன்வசப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, வால் மார்ட் நிறுவன துணை தலைவர் எடூர்டோ கேஸ்ட்ரோ - ரைட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சர்வதேச அளவில், சில்லரை வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள தங்கள் நிறுவனம் வர்த்தகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. அதற்காக, சோஷியல் மீடியா மற்றும் மொபைல் அப்ளிகேசன் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை தேர்ந்தெடுத்துள்ளது. இதன்மூலம், தங்கள் வாடிக்கையாளர்கள் இனிமேல, ஆன்லைன் மற்றும் சோஷியல் நெட்வொர்க் மூலம் ஷாப்பிங் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக, கோஸ்மிக்ஸ் சோஷியல் மீடியா இணையதளத்தை தன்வசப்படுத்தியுள்ளோம். இதன்மூலம், தங்களது நிறுவன வர்த்தகம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஐடி மெட்ராஸ் இன்ஸ்ட்டியூட்டில் படித்த வெங்கி ஹரிநாராயணன் மற்றும் ஆனந்த் ராஜாராமன் உள்ளி்ட்டோரால் கடந்த 2005ம் ஆண்டு உருவாக்கப்பட்டதே இந்த கோஸ்மிக்ஸ் சோஷியல் மீடியா இணையதளம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|