பதிவு செய்த நாள்
21 மே2011
16:17
சென்னை : கன்ஸ்யூமர் கூட்ஸ் மற்றும் ஃபுட்ஸ் தயாரிப்பு மற்றும் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள கேவின்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், கன்பெஃக்ஷனரி பிரிவில் களமிறங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த கேவின்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான சி.கே.ரங்கநாதன் கூறியதாவது, தங்கள் நிறுவன தயாரிப்புகள், எப்போதும் மற்ற நிறுவன தயாரிப்புகளிலிருந்து வேறுபட்டு இருக்கும் என்றும், அதுவே எங்களது தனிச்சிறப்பு என்றும், இந்தியாவில் கன்பெஃக்ஷனரி துறையில், ஆண்டு ஒன்றுக்கு ரூ. 3 ஆயிரம் கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெற்று வருவதாகவும், இதில், பார்லே மற்றும் நியூட்ரின் நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. கன்பெஃக்ஷனரி பிரிவில் களமிறங்க உள்ள தாங்கள் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள நிறுவனங்களான பெர்ஃபெட்டி வான் மெல்லி, கேட்பெரி மற்றும் லோட்டி நிறுவனங்களுக்கு நிகராக தாங்கள் தயாரிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|